மு.கு:
ரொம்ப வருடம் கழித்த blog! என்னுடைய வழக்கமான விஷயங்கள் போல் இல்லாமல் கொஞ்சம் educational content, வயலும் வாழ்வும் போல பொருளாதார விளக்கங்கள், கொஞ்சம் lucid attempt!
ஏதோ ஒரு நாளில், ஏதோ ஒரு கல்லூரியில், ஏதோ ஒரு வகுப்பில் நடந்ததை பார்ப்போம். அந்த ஆசிரியர் ராணிமுத்து calendar முருகன் போல ரொம்ப சாந்தமாக இருந்தார். மாணவர்கள் அவரை கிண்டல் செய்வதை கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. Attendance எடுத்து முடிப்பதற்காக காத்திருந்த மூன்று பேர் சினிமா பார்க்க கிளம்பினார்கள். கொஞ்சம் கூர்ந்து கவனிப்போம், வாருங்கள்.
Friends, இந்த வருஷம் கடைசிக்கு வந்துட்டோம், அடுத்த வருஷம் வேலைக்கு போக நிறைய பேர் plan பண்ணிருப்பீங்க. உங்க எல்லாரையும் கொஞ்சம் employableஆ தயார் பண்ணிக்கணும் .
சார் உங்களுக்கே ஒரு வேலை கிடைக்கும் போது, எங்களுக்கு கிடைக்காதா? (சிரிப்பு சத்தம்)
RBI கவர்னர், பைனான்ஸ் மினிஸ்டர் இவங்களோட மீடியா சந்திப்பு பாருங்க. பொருளாதாரம் படிக்கற பசங்க நாட்டு நடப்பு எல்லாம் கூர்ந்து கவனிக்கணும். பட்ஜெட் பாருங்க, நல்ல பிசினஸ் பேப்பர் படிங்க.
சார் அதெல்லாம் எங்களுக்கு புரிய மாட்டேங்குது.
என்ன டா புரியல?
எதுவுமே புரியல. திடீர்னு பேப்பர் படிக்க சொன்னா நாங்க என்ன பண்றது? பின் பெஞ்சுல நாயகன் பட BGM வாயில வாசித்தான் ஒருவன். அதுல இருக்கற வார்த்தை (terms) புரிய மாட்டேங்குது.
(ஒவ்வொரு வார்த்தை அவர் பேசும் பொழுது கிண்டலாக சொன்ன விஷயங்களை இனி நான் எழுத போவது இல்லை. ஒரு புரிதலுக்காக இது வரை எழுதினேன்)
பொருளாதாரம் பத்தி படிக்க ஆரம்பிக்க சில விஷயங்கள தெரிஞ்சிகிட்டா போதும். முதல்ல நாட்டோட ஜிடிபி - இது தான் நாட்டோட மொத்த உற்பத்தியோட டோட்டல். ஒரு வீட்டோட வருமானம் மாதிரி. இந்தியா மாதிரி பெரிய நாட்டில இதை மெஷர் பண்றது ரொம்ப முக்கியம். நாம எல்லாரும் நல்லா இருக்கணும்னா இந்த ஜிடிபி வளந்துக்கிட்டே போகணும்
சார், அப்போ விலைவாசிக்கும் ஜிடிபிக்கும் சம்பந்தம் இருக்கா?
ஒரு உதாரணத்துக்கு ஒருத்தன் ஒரு தொழில் செஞ்சு ஒரு வருஷத்துக்கு 20 டன் உற்பத்தி பண்றான்னு வெச்சுப்போம். அதை ஒரு வருஷத்தில ஒரு குறிப்பிட்ட விலைக்கு விக்கறான். டன் 1900 ரூபானு வெச்சுப்போம். அடுத்த வருஷம், அவன் போன வருஷ 20 டன் உற்பத்திய விட அதிகம் பண்றது அவசியம். விலை 2000 ரூபானு போய் அதே 20 டன் உற்பத்தி பண்ணினால் நிஜமான வளர்ச்சி இல்ல. அதனால தான் ஜிடிபி பத்தி தெரிஞ்சுக்கும் போது விலைவாசியையும் சேத்து பாக்கணும்.
fiscal deficitனா என்ன சார்?
அரசாங்கம் வருஷா வருஷம் ஒரு பட்ஜெட் போடுது. அது அரசாங்கத்துக்கு வரவு செலவு கணக்கு. செலவு விட வரவு கம்மியா இருந்தா அது fiscal deficit
அப்போ என்ன பண்ணுவாங்க சார் ?
உங்க வீட்டில இந்த மாதிரி ஆனா என்ன பண்ணுவீங்க ?
கழுத்து செயின ஹிந்தி படிக்க அனுப்புவோம் சார்
அதே தான், deficit னு சொல்றது பற்றாக்குறை, அதுக்கு கடன் வாங்க வேண்டியது தான்
அப்போ அது நல்லதில்லையே சார் ?
ஆமாம் நல்லது இல்ல. ஆனா அத சூழ்நிலைக்கு ஏத்தா மாதிரி பாக்கணும். உங்க வீட்டு பட்ஜெட்ல பற்றாக்குறை இருக்கு. உங்க காலேஜ் பீஸ் கட்டாம இருந்தா பற்றாக்குறை இருக்காது. படிப்ப நிறுத்திடலாமா? அந்த மாதிரி மருந்து செலவு, குடிநீர், உணவு இந்த மாதிரி எவ்வளவோ செலவு இருக்கு. வளரும் நாடுகள்ல ஒரு அளவுக்கு பற்றாக்குறை இருப்பது நல்லது. அது நாம வரவுக்கு அதிகமா செலவு பண்றோம், நல்ல எதிர்காலத்துக்காக.
சார் அப்போ நிறைய கடன் வாங்கி எல்லாரும் நல்லா இருக்கலாமே ?
யாரு கடன் கொடுப்பா ? நமக்கு கடன் குடுப்பவங்க நம்ம பட்ஜெட்ட பாக்க மாட்டங்களா?
அப்போ செலவு குறைச்சு, வருமானத்தை கூட்ட வேண்டியது தானே?
1. அரசாங்கத்தோட செலவு, அந்த நாட்டுக்கு பொதுவா செய்யற வசதிகளுக்காக செய்யற செலவு. செலவு குறைச்சா வசதிகள் குறையும். செலவோட பயன் ஒழுங்கா எல்லாருக்கும் போனா போதும். இன்னொரு விஷயம் - அரசாங்கத்தோட செலவு, இன்னொருவனுக்கு வருமானமா இருக்கும்.
2.அரசாங்கத்தோட வருமானம் - வரி. வரிய நம்ம புரிஞ்சிக்க முதல் டைரக்ட் வரி, இன்டைரக்ட் வரின்னு ரெண்டு இருக்குனு புரிஞ்சுக்கணும்.
நேரடியா போய் கவர்ன்மெண்ட் ஆபீஸ்ல கட்டினா டைரக்ட் - நேரடி வரி தானே சார்
நம்ம வருமானத்தில வரி போட்டா டைரக்ட் டேக்ஸ். நம்ம வாங்கற பொருள் மேல போட்டா இன்டைரக்ட் டேக்ஸ், நம்ம செலவுல போடற வரி
சார் நம்ம செலவுல வரியா?
ஆமாம் நம்ம வாங்கற பொருட்கள்ல, பயன்படுத்துற சேவைகள்ல வரி.
எது நல்லது?
வருமான வரி அளவு, நம்ம வருமானத்துக்கு ஏத்தா மாதிரி இருக்கு. நிறைய வருமானம் இருக்கறவங்க நிறைய வரி கட்டுவாங்க. ஆனா இன்டைரக்ட் டேக்ஸ் அப்படி இல்ல. நாம வாங்கற பொருளோட விலைல தான் வரியே தவிர, வாங்கறவன் ஏழையா பணக்காரனானு பாத்து இல்ல. எல்லாருக்கும் ஒரே வரி தான். அதனால வருமான வரி எப்போவுமே நாட்டுக்கு நல்லது.
அப்போ ஏன் சார் அதை போடறாங்க?
ஏன்னா அந்த வரி கலெக்ட் பண்றது சுலபம். வருமான வரி ஒழுங்கா கட்டாதவங்க நிறைய பேர் இருக்கறதுனால தான் இந்த நிலைமை. தவிர அத்தியவாசிய பொருட்களுக்கு வரி விகிதத்தை அரசாங்கம் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி மாத்துவாங்க.
அப்போ வளர்ச்சிக்கு என்ன வழி?
ஒரு நாடு வளர, பணமும் (முதலீடு), வேலைசெய்யும் மக்கள் (workforce) முக்கியம். இந்தியால வேலை செய்ய நிறைய பேர் இருக்காங்க. முதலீடு செய்யணும். புதுசா இண்டஸ்ட்ரி வரணும். அப்போ தான் multiplier எபெக்ட் தெரியும்
அது என்ன சார் multiplier ?
இப்போ நம்ம ஊருக்கு 20 கிலோமீட்டர் தள்ளி ஒரு பேக்டரி வருதுனு வெச்சுப்போம். அந்த பேக்டரி உற்பத்திய கூட்டுறதோடு சேர்ந்து இன்னும் சில பயன் இருக்கு. பேக்டரிக்கு பக்கத்துல முதல்ல ஒரு டீ கடை வரும், ஒரு பொட்டி கடை, ஒரு பஞ்சர் கடை, ஒரு மெக்கானிக் கடை. கொஞ்ச நாள்ல ஒரு பெட்ரோல் பங்க், ஒரு ஹோட்டல், ஒரு மருந்து கடை. பஸ் ரூட் விடணும், ஷேர் ஆட்டோ போகும். கொஞ்ச நாள்ல பைக்ல போனவன் எல்லாம் முதுகு வலியோட அவஸ்த்தை படுவான். பேக்டரி பக்கத்திலே வீடு வாங்குவான். இப்படி ஒரு முதலீடு, நிறைய வர்த்தக பரிமாற்றங்களா multiply ஆகும்.
இதை தவிர வேற இல்லையா ?
உற்பத்தியை கூட்டறதுக்கு முதலீடு வேணும், அதை வாங்கும் சக்தியும் வேணும். நம்ம நாட்டில உற்பத்தி செஞ்சு இன்னொரு நாட்டில விக்கலாம். அப்போ நம்ம உற்பத்தியை நிறைய பேர்கிட்ட விக்கற வாய்ப்பு ஏற்படுது. இது வளர்ச்சிக்கு இன்னொரு வழி
சார் இந்த மாதிரி பண்ணா ஸ்லோவா தான் நாடு முன்னேறும். மின்னல் வேகத்தில வளர என்ன பண்றது?
innovation - அதுக்கு புதுமையான கண்டுபிடிப்பு தான் உதவும். ஒரு கண்டுபிடிப்பு இந்த வேகத்தை கொடுக்கும். இன்டர்நெட் - ஒரு யுக்திய வெச்சு உலகம் எப்படி வளந்ததுனு பாக்கறீங்க
சார் இதை தவிர ட்வின் பேலன்ஸ் ஷீட்னு ஏதோ சொல்றாங்களே?
மச்சி, liability சைடு டோட்டலும் அசெட் சைடு டோட்டலும் வேற வேற வந்து நம்ம எக்ஸாம்ல மாட்டலியா? அதே தான், என்ன சார் கரெக்டா?
(முகம் மாறாமல்) இப்போ முதலீடு பத்தி பாத்தோம், முதலீடு செய்ய பணம் எங்கேந்து வரும்? இதுல தனி மூதலீடோட சேந்து வங்கி கடனுக்கும் முக்கிய பங்கு இருக்கு. வங்கி கொடுத்த கடன், உற்பத்தியாளருக்கு ஏதோ ஒரு அஸெட்டா இருக்கு. இப்போ அந்த அஸெட்ல ஏதாவது ஒரு பிரச்னைனா, அது கடன் குடுத்தவனுக்கும் பிரச்னை, கடன் வாங்கினவனுக்கும் பிரச்னை. உங்க accounts ஆசிரியர் ரெண்டு பாலன்ஸ் ஷீட் அஸெட் சைடு காட்டி விளக்குவார்.
அப்போ என்ன பண்றது?
புதுசா கடன் கொடுக்க வேண்டியது தான் ஒரே வழி.
என்ன சார் சொல்றீங்க ? அவன் தான் வாங்கின கடனையே கொடுக்க முடியாம மாட்டிக்கினானே
இது ஒரே ஒரு கடன் வாங்கின உற்பத்தியாளர் பிரச்சனைனா வேற மாதிரி அணுகலாம். ஒரு நாட்டில, இல்ல ஒரு தொழில்ல எல்லாரும் அந்த மாதிரி மாட்டிண்டா, பேங்கிங் ஸிஸ்டெமே ஸ்தம்பிச்சு போய்டும். அந்த பழைய கடன் கணக்க அப்படியே ஓரம் கட்டிட்டு திரும்பி கடன் குடுத்தா தான் economy ஓடும். அப்படினு கெய்னஸ் சொல்றாரு. எனக்கும் அப்படி தான் தோணுது.
அவர் சொல்வதில் நம்பிக்கை இல்லாமல், கெய்ன்ஸ் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன், இன்னும் சில வருஷங்களில் தலை முடி கொட்டி, அலும்னி மீட்டுக்கு வரப்போகும், மாணவர்கள், கல்லூரி மணி அடிக்க, கொஞ்சம் யோசிச்சு கொண்டே வெளியே சென்றனர்! அந்த ஆசிரியர் Lucy படம் பாத்துகொண்டே ரிட்டையர் ஆவார் போல!

I never know what keims theory so far. But I can say atleast a word about that now:) As usual Awesome Machi!!
ReplyDeleteஅட்டகாசம். பெரிய விஷயங்கள் சாமானியனுக்குப் புரியும்
ReplyDeleteவகையில். பிரமாதம்.
மெயில் பண்ணுங்க. பத்திரிக்கையில போடலாம்.
வாழ்க!