இது ஒரு சிறுவனின் கதை; பொடியன்! அவன் எனக்கு ரொம்ப நெருக்கமான உறவு! கதை என் சிறு வயதில் நடந்தது, late 80s early 90s என்று வைத்து கொள்வோம். கதை அந்த பொடியனுக்கும் அவன் மாமாவிற்கும் இருந்த பிரத்யேக உறவை பற்றி. பொடியனுக்கு பன்னிரண்டு வயது இருந்திருக்கலாம், ஆள் இன்னும் வளரவில்லை - குள்ளம் தான். ஒரு தனியார் பள்ளியில் படித்து கொண்டிருந்தான் - மக்கும் இல்லை, அதி புத்திசாலியும் இல்லை. சொல்வதற்கு என்று பெரிதாக ஒன்றும் இல்லாத பொடியன். அவன் மாமா ஏதோ ஒரு தனியார் கம்பெனியில் சுமார் வேலை. ஐந்தடி இருப்பார், பெரிய கண்ணாடி, ஒரு மாதிரி குடமிளகா மூக்கு - அவர் அம்மா போல என்று நினைக்கிறேன். உடல் அமைப்பு அந்த பொடியனை போல தான் - சொல்வதற்கு என்று பெரிதாக ஒன்றும் இல்லை (blog எழுதுபவர்களுக்கு வர்ணிப்பது கஷ்டம் தான்).மாமாவிற்கு அந்த பொடியன் மேல் மிகுந்த பாசம். மிகுந்த என்றவுடன் ஞாபகம் வந்தது - தலைப்பை படித்திருப்பீர்கள். மாமாவிற்கு ஒரு குணாதிசயம் உண்டு. அவர் எல்லாவற்றையும் மிகைப் படித்தியே பேசுவார், பொய் சொல்ல மாட்டார். மே மாதம் வெய்யில் அதிகமாக இருக்கும் பொழுது - மவுண்ட் ரோடே வெயில்ல பத்திண்டு எரியறது என்பார், ஆஸ்திரேலியா இந்தியாவை கிரிக்கெட்டில் ஜெயித்தால், slater அடித்த பந்து டிவி பார்த்து கொண்டவா மேல வந்து விழுந்தது என்பார், தாம்பரம் தாண்டி plot வாங்க போன போது, அந்த புரோக்கர் கிட்ட "ஏம்பா இன்னும் போனா jaffna வந்திடும் போல" என்பார். திருப்பதில கூட்டமே இல்லை, பாலாஜியே வாசலில் நின்னு டிக்கெட் குடுக்கறார் என்பார். லேசான நகைச்சுவை இருக்கும், புத்திசாலித்தனம் என்று தானாகவே நினைத்து கொண்டு பேசுகிற வழக்கம். பேசுவது என்றால் பிடிக்கும், யாரிடம் வேண்டும் என்றாலும் பேசுவார், எதை பற்றி வேண்டுமானாலும் பேசுவார், புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வதில் அலாதி பிரியம். google இல்லாத காலம், எல்லாம் புத்தகமும், தொலைக்காட்சியும் தான் பாடம் சொல்லி தரும். சத்தமாக தான் பேசுவார், கொஞ்சம் பாட்டும் பாடுவார். ritchie தெருவிலும், பர்மா பஜாரிலும் கிடைக்கும் அனைத்து electronic சமாச்சாரங்களையும் வாங்கி குவிப்பார், சில சமயம் அதையெல்லாம் பிரித்து ஏதோ ரிப்பேர் செய்வார். அவர் பேச்சிலும், நடவடிக்கையிலும் ஒரு வேகம் இருக்கும். பரபரப்பு!
பொடியன் - அவரின் தங்கையின் மகன். திடீரென்று ஏன் அவர் அந்த பொடியனின் வாழ்க்கையில் புகுந்தார் என்று தெரியவில்லை. (என் எல்லா bloகிலும் இந்த intelligent design பற்றி எழுதுவேன்). ஆனால் பொடியன் பன்னிரண்டு பதிமூன்று வயதில் தான் அவருடன் பழக ஆரம்பித்தான். ஞாயிற்று கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் பொடியன் வீட்டிற்கு வருவார். பொடியன் எப்பொழுதும் விளையாடி கொண்டிருப்பான். cricket விளையாடும் பொழுது ஒரு முறை வந்தார் - பொடியன் ரொம்ப சுமாராக விளையாடுவான். அவர் தங்கையிடம் 'உன் பிள்ளை tendulkar, kapil dev மாதிரி விளையாடறான்' என்றார் (தலைப்பை படியுங்கள்). அது வரைக்கும் அந்த பொடியனை யாரும் பாராட்டியதே இல்லை. அவனுக்கு அது புதுசாக இருந்தது. வரும் வாரங்களில் பொடியன் மாமாவிடம் பாராட்டு வாங்க முயற்சிக்க ஆரம்பித்தான். cricket பற்றி பேச ஆரம்பித்தான். அந்த கால கட்டத்தில் cricket தவிர சிறுவர்களுக்கு ஒன்றும் தெரியாது. one day cricket பிரபலமாக கொண்டிருந்த காலம், கேபிள் டிவியும் அப்பொழுது தான் தொடக்கம். சிறுவர்களுக்கு படிப்பை விட கிரிக்கெட்டே நன்றாக தெரியும். பொடியனுக்கு தெரிந்தவைகளை மாமாவிடம் சொல்ல ஆரம்பித்தான். அவர் ஆச்சரிய பட ஆரம்பித்தார் - அட இவ்வளவு தெரியுமா உனக்கு என்றார் (தலைப்பை படியுங்கள்). பொடியன் அவன் திறமைகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது போல உணர்ந்தான்.மெல்ல மெல்ல, carrom board, chess, tennis என்று பேச ஆரம்பித்தார்கள், கொஞ்சம் விளையாடினார்கள். அதிலெல்லாம் மாமாவை சுலபமாக வீழ்த்தினான். பொடியனுக்கு இமாலய வெற்றி போல இருந்தது, மாமாவோ இவனை போல ஒரு பையனை பார்த்ததில்லை என்றார் (தலைப்பை படியுங்கள்).கொஞ்சம் கொஞ்சமாக வேற விஷயங்களை பற்றி பேச ஆரம்பித்தார்கள் - அரசியல், சினிமா, பிற நாடுகளை பற்றி - சம்பந்தமே இல்லாத விஷயங்களை பற்றி. பொடியன் அவரிடம் பேச வேண்டும் என்று நிறைய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தான். தன்னை புத்திசாலி என்று நினைப்பவிரிடம் நல்ல பெயர் நிலைத்து நிற்க நிறைய முயற்சிகள் செய்தான்.
இந்த இடத்தில - ஒரு pause button! பொடியன் என்ன நினைத்தாலும், மாமாவோ அவர் சுபாவத்திற்கு ஏற்ற மாதிரியே, அனைவரிடம் பழகுவதை போல, அனைவரிடம் மிகை படுத்தவதை போல தான், இவனிடமும் பேசினார். தன் சகோதரி மேல் இருந்த அன்பினால் கொஞ்சம் பாசம் அதிகம் என்று சொல்லலாம். இவன் வயதில் இருக்கும் இன்னும் சில உறவினர்களின் பிள்ளைகளையும், தன் பிள்ளைகைளையும் கூட அப்படி தான் பேசினார்; பழகினார். மற்றவர்கள் அறிவுக்கு அது ஏன் புலப்படவில்லை என்று தெரியாது. இந்த பொடியன் தான் 'motivate' ஆனான். மற்றவர்கள் அவரிடம் இவ்வளவு நெருக்கமாக பழகவுமில்லை. சிலர் அவரின் குறைகளை பற்றி கூட பேசி இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு பொடியனை விட முதிர்ச்சி அதிகமாக இருக்கலாம். பொடியனுக்கு அவர் மிகை படுத்துகிறார் என்று தெரியாத அப்பாவித்தனம் இருந்திருக்கலாம். பொடியனிடம் ஒரு reciprocation இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். Godsend! மாமா இந்த bloகை படிக்க நேர்ந்தால், இதெல்லாம் நான் செய்தேனா, என்னுடைய தாக்கம் இவ்வளவு இருந்ததா என்று கூட நினைக்கலாம். நாம் பேசுவதும், செய்வதும் மற்றவர்களிடம் எப்படி சென்றடையும் என்று நாம் புரிந்து கொள்வதில்லை.
பொடியனுக்கும் மாமாவிற்கும் உறவு வளர்ந்து கொண்டே வந்தது. மாமாவின் மிகை
பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்தான். ஆனால் அவரிடம் அங்கீகாரம் பெறுவதற்காக
தொடங்கிய அந்த அறிவு தேடலின் சுகத்திலிருந்து அவன் மீளவே இல்லை. ஒருவன்
தன்னுடைய அறியாமையை தெரிந்து கொள்ளும் பொழுதே புத்திசாலி ஆகிறான். இரண்டும்
கெட்டான் பருவமான பதினைந்து பதினாறு வயதுகளில் ஏற்படும் சில மாற்றங்களை
பற்றி அவனுக்கு நாசூக்காக சொல்லி கொடுத்தார். சுஜாதாவின் "நிலா நிழல்"
புத்தகத்தை கொடுத்து "cricket பற்றிய புத்தகம் - படி" என்றார். என்னை
கேட்டால், பள்ளிகளில் அந்த கதையை non-detail பகுதியில் சேர்த்து விட
வேண்டும். புத்தகம் எழுதிய சுஜாதாவிற்கும், புத்தகத்தை கொடுத்த
மாமாவிற்கும் அவன் எப்படி நன்றி சொல்ல போகிறான். ஒரு யுகம் வேண்டும்! ஏன்?
எதற்கு? எப்படி? புத்தகத்தை கொடுத்தார் - பாலுணர்வு சம்பந்தமான கேள்விகளும்
குழப்பங்களும் நிறைந்த வயதில் இருந்த பொடியனுக்கு எவ்வளவு தெளிவு தேவை
பட்டது. deft ஆக பொடியனை handle செய்தார். முதல் முறை வண்டி ஒட்டி பழக, அவருடைய வண்டியை கொடுத்தார், எதிர் வீட்டு ஜன்னல் பக்கத்தில் மோதி நிறுத்தினான் பொடியன். அவர் ஒன்றுமே சொல்லாமல், உனக்கு எதுவும் அடிபடலியே என்று கேட்டார்.
இவ்வாறிருக்க, அந்த பொடியனின் குடும்பத்தில் ஒரு பணச்சிக்கல் ஏற்பட்டது. ஒரு middle class பிராமண குடும்பம். கதையின் tragedy track ஐ சென்சார் செய்து விடுவோம். பொடியனின் படிப்பு நின்று போகி விடுமோ என்ற கவலையில் இருந்த பொழுது, மாமா அவர் தங்கையிடம் "நீ எதுக்கும் பயப்படாதே, நான் இருக்கிறேன், ஒரு லட்சம் ரூபாய் இப்பொழுதே உன் பேங்க் அக்கௌண்டில் கட்டி விடுகிறேன் (ஒரு லட்சம் அப்பொழுது பெரிய தொகை). நீ அதை பத்து வருடமோ, பதினைந்து வருடமோ கழித்து திருப்பி கொடு. எனக்கு இவன் மேல் நிறைய நம்பிக்கை இருக்கிறது. அவன் வாழ்வில் பெரிய ஆளாக வருவான்" என்றார். பொடியன் மேல் நம்பிக்கை வைத்த இரண்டாம் நபர் அவன் மாமா. அவனுக்கு அந்த நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக இருந்தது. பொடியனுக்கு ஒரு மனோதைரியம் வந்தது. பாலாஜி சக்திவேல்போன்ற திறமையான இயக்குனர்கள் இருந்தால் கெய்ன்ஸ் எழுதிய பொருளாதார தத்துவத்தையும், quantitative easing என்ற வழி முறையையும் சேர்த்து backgrounடில் காண்பித்திருப்பார்கள்.
பொடியன் உயரமாக வளர்ந்தான், திறமைகளை வளர்த்து கொண்டே வந்தான். அவர்கள் மாமாவிடம் ஒரு ரூபாய் கூட வாங்காமல், உழைத்து, அவனை படிக்க வைத்தார்கள் - டாக்டர் ஆகவோ, engineer ஆகவோ, chartered accountant ஆகவோ ஆனான். பொடியனின் மனதில் நிரந்தரமான அறிவுத்தேடலை புகுத்தி, அவனை பாராட்டி, நம்பிக்கையூட்டி, அவன் திறமைகளை வளர்த்து கொள்ள ஒரு உந்துதலாக இருந்து, ஒரு midlife crisis பற்றி கவலை படாமல் செய்து, பருவ வயதில் அவனை வழிநடத்தி, அந்த பொடியனை ஓங்கி உயர வைத்த அந்த மாமாவை கடவுளின் மனித ரூபமே என்று சொன்னால், தலைப்புக்கு முரணாக, மிகையாகாது என்று நினைக்கிறேன்!
Dedicated to all the loving souls in our family who spend their lifetime sacrificing personal ambitions to upbring children!
மிக (தலைப்புக்கு முரணானது) அருமையான பதிவு! But was a bit difficult for me to read tamil. Yes, motivation through others can work wonders as conveyed by you through this post!
ReplyDeleteபொடியனின் எழுத்துகளில் சுஜாதா தென்பட்டார்... எமது ஆசிரியரின் தமிழை எண்ணி பெருமை கொள்கின்றேன்... மேலும் மேலும் இவ்வாறான புத்துனர்வுகளை பெற விரும்புகின்றோம்...
ReplyDeleteஅடி தூள் என்றால் மிகையாகாது
ReplyDeleteஅடி தூள் என்றால் மிகையாகாது
ReplyDelete