படிக்கும் முன் ஒரு வேண்டுகோள்: முடிவுரைக்கு இடையில் செல்லாதீர்கள்!
மு.செ: எனக்கு இந்த வெள்ளை பல்பு பிடிக்கல, மஞ்சள் பல்பு நல்லா இருக்கும்ல!
ப.செ: டேய், மஞ்ச பல்பு எல்லாம் பழசு டா, ஆராய்ச்சி பண்ணி தான் வெள்ளையா மாத்திருக்காங்க. இனிமே purple, ப்ளூ பல்பு தானாம். அது தான் நம்ம உடம்புக்கு நல்லதாம். எனக்கும் பிரஷாந்த் மாதிரி மஞ்ச பல்பு பிடிக்காதுங்கறது வேற விஷயம். அது சரி, ஏன் உம்முனு தலையை தொங்க போட்டிருக்க?
மு.செ: எனக்கு ஏதோ சந்தேகங்கள் எல்லாம் வருது, fundamental ethos பற்றி தெரிஞ்சிக்கணும். சொல்லணும்ணா ஒரு midlife crisis மாதிரி
ப.செ: முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள.......நீ சொல்றத கேக்கும் போது மொத்தமா சிரிக்கணும் போல இருக்கு. ஆனா இங்கே தான் காத்தே கிடையாதே. தண்ணியே பைப்ல தான் ஊத்தறாங்க, அதுவும் மில்லி மில்லியா ஊத்தறாங்க. ஆனா ஒண்ணு, நமக்கு எவ்வளவு தாகம்னு அவங்க எப்படி தான் கண்டுபிடிப்பாங்களோ, சரியான அளவு, சரியான நேரத்துக்கு தண்ணி வருது. சொட்டு தண்ணி கூட வீண் ஆறது இல்ல. சரி, உனக்கு என்ன பிரச்சனை, அதை சொல்லு?
மு.செ: எனக்கா? நாம எப்படி இங்கே வந்தோம், இங்கே என்ன நடக்குது, இதெல்லாம் ஒரே குழப்பமா இருக்கு?
ப.செ: இது தான் மேட்டரா, நான் சொல்றேன், நான் தான் இங்கே ரொம்ப நாளா இருக்கேன். இங்கே இருக்க நிறைய பேர், நான் சிந்தினதிலயும், சிதறினதிலயும் வாழ்க்கை நடத்தற பசங்க. இந்த பிரபஞ்சத்தை எடுத்துட்டா, நாம எல்லாரும் ஒரு உயிர்சக்திலேந்து வந்தோம், அதுலேந்து வேற வேற உயிர்சக்தி உருமாறி
மு.செ: யோவ், உன்கிட்ட இந்த philosophy lecture எல்லாம் கேக்கல. இதோ இந்த பக்கத்துல காட்டமா கீரைகட்டு மாதிரி இருக்கானே, அவன் எப்படி வந்தான், அதை சொல்லு
ப.செ: சரி, உனக்கு metaphysics வேண்டாம்னா நாம existential biologyகு போவோம்
மு.செ: (முணுமுணுத்து கொண்டே) இந்த science எல்லாம் நிஜமாவே இருக்கா, இல்ல இவன் அடிச்சு விடறானா?
ப.செ: நாம எல்லாரும் இங்கே வந்தது ஒரு சின்ன விதை மூலமா தான். தமிழ் இலக்கியத்துல ஒரு மீன் வாயில போகிற அளவுக்கு இருக்கற ஒரு விதை தான் இவ்வளவு பெரிய ஆலமரமா மாறி எல்லாருக்கும் உதவுதுனு....
மு.செ: யோவ் boomer அங்கிள், மேட்டர்கு வா
ப.செ: சரி, ரொம்ப எளிமையா சொல்றேன், அந்த மூலைல ஒரு மெஷின் இருக்கா? அதுல நாம வீட்டில யூஸ் பண்ற ரப்பர் கால்மிதி மாதிரி ஒண்ணு இருக்கும். அதுல ஒரு நாலு இன்ச்ல வட்ட வட்டமா குழி இருக்கும். அதுல மண்ணை நிரப்பி அடுத்த மெஷின்ல அனுப்புவாங்க. அனுப்புவாங்கன்னா அதுவா conveyor பெல்ட் மூலமா அடுத்த மெஷின்கு போய்டும், அங்கே ஒரு குழிக்கு சரியா ஒரு விதைனு அந்த மெஷின் புதைச்சிடும். அது தான் ஆரம்பம். ஒரு விதை கூட வீண் போகாது. அந்த ரப்பர் tray தானே போய் அது பக்கத்துல இருக்கற மூடி போட்ட boxகு போய்டும். எப்பெப்போ நமக்கு தண்ணி வேணுமோ, அங்கங்கே பைப் மூலமா சரியா வரும்.
மு.செ: அந்த boxல என்னாகும்?
ப.செ: அங்கே நமக்கு தேவையான ஈரப்பதத்தை கட்டுப்பாடா குடுப்பாங்க, அங்கே தான் நாம முளை விடுவோம். அப்புறம், ஒவ்வொறு trayம் தானியங்கி நகரும் மெஷின் மூலமா இந்த rackல தானே வந்து உக்காந்துக்கும். இந்த rack பாரு, செங்குத்தா அடுக்கடுக்கா இருக்கு. ஒவ்வொரு trayக்கு தலை மேல ஒரு LED panel இருக்கு. தண்ணி வரதுக்கு பைப். கூரை எவ்வளவு உயரமோ அவ்வளவு அடுக்கு வெச்சிருப்பாங்க. இந்த tray தான் incubator கருவி மாதிரி. இங்கே தான் நாம வளரனும். விளக்கு அணைச்சாங்கன்னா bedtime. இந்த இடம் பூரா உஷ்ணம், ஈரப்பதம், எல்லாமே கண்காணிக்கிற சென்சார் போட்ருக்காங்க. ஒரு ஒரு தட்டுல இருக்கற நமக்கு ஒரு நம்பர் போட்டு barcode எல்லாம் உண்டு. நாம தேவையான உயரத்துக்கு வளரும் போது, நம்ம தட்டோட அடுத்த அறைக்கு எடுத்துட்டு போய்டுவாங்க. அங்கே தான் அவங்களுக்கு தேவையானதெல்லாம் வெட்டுவாங்க
மு.செ: இது தான் எனக்கு பயமா இருக்கு, அங்க தான் நம்ம இறக்க போறோமோ? மரணமா?
ப.செ: (சிரித்து கொண்டே) புனரபி ஜனனம் புனரபி மரணம் கேட்டது இல்லையா நீ? இல்ல இல்ல, எல்லாரையும் மண்ணோட மண்ணா எடுத்து கொன்னுட மாட்டாங்க. நம்மால அவங்களுக்கும் இன்னும் உதவி தேவை படுது. தேவையானதை எடுத்துட்டு நம்மள சுழற்சி முறைல திரும்பவும் வளர அனுப்புவாங்க. நம்ம உடம்பிலேந்து சிலது எடுத்து பல மடங்கா பெருக்கிக்க பார்ப்பாங்க. மரணமே இல்லனு சொல்ல மாட்டேன், ஆனா அவ்வளவு சீக்கிரம் நம்மள தூக்கி போட மாட்டாங்க
மு.செ: சரி, இந்த மாதிரி இடத்துல அடைஞ்சு கிக்கறது உனக்கு clasutrophobicஆ இல்ல ?
ப.செ: வெளியே நாம வாழறதுக்கு ஏதுவா சூழ்நிலை இல்லை. மாசு, இயற்கை பேரிடர், நகரமயமாக்குதல் போல நிறைய பிரச்சனை. ரசாயனம் கலந்த உரம் போடறாங்க, மூச்சு முட்டுது. முக்கியமா தண்ணி இல்ல. இப்படி நாம உள்ள இருக்கறதுனால தண்ணி 70% சேமிக்க முடியுதாம்.
மு.செ: இருந்தாலும், சூரிய ஒளி, காற்று, பறவைகள், விலங்குகள்னு இயற்கையோட சேர்ந்து வாழற மாதிரி வருமா ?
ப.செ: நீ காலத்துக்கு ஏத்தா மாதிரி உன்னை மாத்திக்கணும், இல்லனா obsolete ஆயிடுவ. நான் வாழ்க்கையின் ரகசியம், அர்த்தம் இதெல்லாம் தேடறதே இல்ல. existenceகு அர்த்தம் இருக்கானு தெரியாது, ஆனா அர்த்தம் பண்ண முடியும். Be useful to people around you!
முடிவுரை
1. இந்த பதிவு ஒரு vertical farming facility உள்ளே இருக்கும் பக்குவபட்ட செடி (ப.செ) மற்றும் முளைச்சு மூணு இலை விடாத செடி (மு.செ) இடையே நடந்த ஒரு கற்பனை உரையாடல்
2. இதே தலைப்பில் நான் இன்னொரு பதிவும் எழுதியுள்ளேன். இப்போது அதை நீங்கள் தேடி படிப்பீர்கள் என்ற வியாபார யுக்தி தான் :)
3. இப்பொழுது நீங்கள் vertical farming பற்றிய youtube விடீயோக்களை பார்த்து விட்டு கண்டிப்பாக இரண்டாவது முறை படிப்பீர்கள் என்று நம்புகிறேன்!
No comments:
Post a Comment