Thursday, 17 November 2022

கண்டிப்பாக இரண்டாவது முறை படிப்பீர்கள்!


படிக்கும் முன் ஒரு வேண்டுகோள்: முடிவுரைக்கு இடையில் செல்லாதீர்கள்!

மு.செ: எனக்கு இந்த வெள்ளை பல்பு பிடிக்கல, மஞ்சள் பல்பு நல்லா இருக்கும்ல!

ப.செ: டேய், மஞ்ச பல்பு எல்லாம் பழசு டா, ஆராய்ச்சி பண்ணி தான் வெள்ளையா மாத்திருக்காங்க. இனிமே purple, ப்ளூ பல்பு தானாம். அது தான் நம்ம உடம்புக்கு நல்லதாம். எனக்கும் பிரஷாந்த் மாதிரி மஞ்ச பல்பு பிடிக்காதுங்கறது வேற விஷயம். அது சரி, ஏன் உம்முனு தலையை தொங்க போட்டிருக்க?

மு.செ: எனக்கு ஏதோ சந்தேகங்கள் எல்லாம் வருது, fundamental ethos பற்றி தெரிஞ்சிக்கணும். சொல்லணும்ணா ஒரு midlife crisis மாதிரி

ப.செ: முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள.......நீ சொல்றத கேக்கும் போது மொத்தமா சிரிக்கணும் போல இருக்கு. ஆனா இங்கே தான் காத்தே கிடையாதே. தண்ணியே பைப்ல தான் ஊத்தறாங்க, அதுவும் மில்லி மில்லியா ஊத்தறாங்க. ஆனா ஒண்ணு, நமக்கு எவ்வளவு தாகம்னு அவங்க எப்படி தான் கண்டுபிடிப்பாங்களோ, சரியான அளவு, சரியான நேரத்துக்கு தண்ணி வருது. சொட்டு தண்ணி கூட வீண் ஆறது இல்ல. சரி, உனக்கு என்ன பிரச்சனை, அதை சொல்லு?

மு.செ:  எனக்கா? நாம எப்படி இங்கே வந்தோம், இங்கே என்ன நடக்குது, இதெல்லாம் ஒரே குழப்பமா இருக்கு?

ப.செ: இது தான் மேட்டரா, நான் சொல்றேன், நான் தான் இங்கே ரொம்ப நாளா இருக்கேன். இங்கே இருக்க நிறைய பேர், நான் சிந்தினதிலயும், சிதறினதிலயும் வாழ்க்கை நடத்தற பசங்க. இந்த பிரபஞ்சத்தை எடுத்துட்டா, நாம எல்லாரும் ஒரு உயிர்சக்திலேந்து வந்தோம், அதுலேந்து வேற வேற உயிர்சக்தி உருமாறி

மு.செ: யோவ், உன்கிட்ட இந்த philosophy lecture எல்லாம் கேக்கல. இதோ இந்த பக்கத்துல காட்டமா கீரைகட்டு  மாதிரி இருக்கானே, அவன் எப்படி வந்தான், அதை சொல்லு

ப.செ: சரி, உனக்கு metaphysics வேண்டாம்னா நாம existential biologyகு போவோம்

மு.செ: (முணுமுணுத்து கொண்டே) இந்த science எல்லாம் நிஜமாவே இருக்கா, இல்ல இவன் அடிச்சு விடறானா?

ப.செ: நாம எல்லாரும் இங்கே வந்தது ஒரு சின்ன விதை மூலமா தான். தமிழ் இலக்கியத்துல ஒரு மீன் வாயில போகிற அளவுக்கு இருக்கற ஒரு விதை தான் இவ்வளவு பெரிய ஆலமரமா மாறி எல்லாருக்கும் உதவுதுனு....

மு.செ: யோவ் boomer அங்கிள், மேட்டர்கு வா

ப.செ: சரி, ரொம்ப எளிமையா சொல்றேன், அந்த மூலைல ஒரு மெஷின் இருக்கா? அதுல நாம வீட்டில யூஸ் பண்ற ரப்பர் கால்மிதி மாதிரி ஒண்ணு இருக்கும். அதுல ஒரு நாலு இன்ச்ல வட்ட வட்டமா குழி இருக்கும். அதுல மண்ணை நிரப்பி அடுத்த மெஷின்ல அனுப்புவாங்க. அனுப்புவாங்கன்னா அதுவா conveyor பெல்ட் மூலமா அடுத்த மெஷின்கு போய்டும், அங்கே ஒரு குழிக்கு  சரியா ஒரு விதைனு அந்த மெஷின் புதைச்சிடும். அது தான் ஆரம்பம். ஒரு விதை கூட வீண் போகாது. அந்த ரப்பர் tray தானே போய் அது பக்கத்துல இருக்கற மூடி போட்ட boxகு போய்டும். எப்பெப்போ நமக்கு தண்ணி வேணுமோ, அங்கங்கே பைப் மூலமா சரியா வரும்.

மு.செ: அந்த boxல என்னாகும்?

ப.செ: அங்கே நமக்கு தேவையான ஈரப்பதத்தை கட்டுப்பாடா குடுப்பாங்க, அங்கே தான் நாம முளை விடுவோம். அப்புறம், ஒவ்வொறு trayம் தானியங்கி நகரும் மெஷின் மூலமா இந்த rackல தானே வந்து உக்காந்துக்கும். இந்த rack பாரு, செங்குத்தா அடுக்கடுக்கா இருக்கு. ஒவ்வொரு trayக்கு தலை மேல ஒரு LED panel இருக்கு. தண்ணி வரதுக்கு பைப். கூரை எவ்வளவு உயரமோ அவ்வளவு அடுக்கு வெச்சிருப்பாங்க. இந்த tray தான் incubator கருவி மாதிரி. இங்கே தான் நாம வளரனும். விளக்கு அணைச்சாங்கன்னா bedtime. இந்த இடம் பூரா உஷ்ணம், ஈரப்பதம், எல்லாமே கண்காணிக்கிற சென்சார் போட்ருக்காங்க. ஒரு ஒரு தட்டுல இருக்கற நமக்கு ஒரு நம்பர் போட்டு barcode எல்லாம் உண்டு. நாம தேவையான உயரத்துக்கு வளரும் போது, நம்ம தட்டோட அடுத்த அறைக்கு எடுத்துட்டு போய்டுவாங்க. அங்கே தான் அவங்களுக்கு தேவையானதெல்லாம் வெட்டுவாங்க

மு.செ: இது தான் எனக்கு பயமா இருக்கு, அங்க தான் நம்ம இறக்க போறோமோ? மரணமா?

ப.செ: (சிரித்து கொண்டே) புனரபி ஜனனம் புனரபி மரணம் கேட்டது இல்லையா நீ?  இல்ல இல்ல, எல்லாரையும் மண்ணோட மண்ணா எடுத்து கொன்னுட மாட்டாங்க. நம்மால அவங்களுக்கும் இன்னும் உதவி தேவை படுது. தேவையானதை எடுத்துட்டு நம்மள சுழற்சி முறைல திரும்பவும் வளர அனுப்புவாங்க. நம்ம உடம்பிலேந்து சிலது எடுத்து பல மடங்கா பெருக்கிக்க பார்ப்பாங்க. மரணமே இல்லனு சொல்ல மாட்டேன், ஆனா அவ்வளவு சீக்கிரம் நம்மள தூக்கி போட மாட்டாங்க

மு.செ: சரி, இந்த மாதிரி இடத்துல அடைஞ்சு கிக்கறது உனக்கு clasutrophobicஆ இல்ல ?

ப.செ: வெளியே நாம வாழறதுக்கு ஏதுவா சூழ்நிலை இல்லை. மாசு, இயற்கை பேரிடர், நகரமயமாக்குதல் போல நிறைய பிரச்சனை. ரசாயனம் கலந்த உரம் போடறாங்க, மூச்சு முட்டுது. முக்கியமா தண்ணி இல்ல. இப்படி நாம உள்ள இருக்கறதுனால தண்ணி 70% சேமிக்க முடியுதாம்.

மு.செ: இருந்தாலும், சூரிய ஒளி, காற்று, பறவைகள், விலங்குகள்னு இயற்கையோட சேர்ந்து வாழற மாதிரி வருமா ?

ப.செ:  நீ காலத்துக்கு ஏத்தா மாதிரி உன்னை மாத்திக்கணும், இல்லனா obsolete ஆயிடுவ. நான் வாழ்க்கையின் ரகசியம், அர்த்தம் இதெல்லாம் தேடறதே இல்ல. existenceகு அர்த்தம் இருக்கானு தெரியாது, ஆனா அர்த்தம் பண்ண முடியும். Be useful to people around you!

முடிவுரை

1. இந்த பதிவு ஒரு vertical farming facility உள்ளே இருக்கும் பக்குவபட்ட செடி (ப.செ) மற்றும் முளைச்சு மூணு இலை விடாத செடி (மு.செ) இடையே நடந்த ஒரு கற்பனை உரையாடல்

2. இதே தலைப்பில் நான் இன்னொரு பதிவும் எழுதியுள்ளேன். இப்போது அதை நீங்கள் தேடி படிப்பீர்கள் என்ற வியாபார யுக்தி தான் :)

3. இப்பொழுது நீங்கள் vertical farming பற்றிய youtube விடீயோக்களை பார்த்து விட்டு கண்டிப்பாக இரண்டாவது முறை படிப்பீர்கள் என்று நம்புகிறேன்!  

Monday, 5 September 2022

கல் ஆமை

சென்னை சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் நடந்து கொண்டு இருந்தபோது தான் அவரை பார்த்தேன். என் பேராசிரியர் போல் இருக்கிறாரே என்று நெருங்கி போனேன். சரியாக கல்லால் ஆன ஆமை ஒன்று இருக்குமே அதன் அருகே அவரிடம் சென்றேன். பின்னாடி இருந்து "பெருசு கொஞ்சம் வழி விடு" என்றான் ஒருவன்.

இவரும் சிரித்து கொண்டே வழி விட்டார். உங்களுக்கு கோபமே வராதா? என்று கேட்டேன். வரும், ஆனா அது எதுக்காக வரணும், எப்படி வெளிகாட்டணும் இதெல்லாம் என் கண்ட்ரோல் ல இருக்கு என்றார். அதுக்கும் மேல அவன் என்னை பெருசு னு தானே சொன்னான். பழசு னு சொல்லலியே என்று கண்ணடித்தார்.

சார் எப்படி இருக்கீங்க என்றேன். "பழசு" ஆகாம இருக்கேன் என்றார். நான் சிரித்தேன். ஏன் சார் வருஷா வருஷம் பசங்களுக்கு அதே பாடத்தை தானே சொல்லி தரீங்க? அப்பறம் பழசாகாம என்னவாம்? என்றேன் நக்கலாக. அவர் சிரித்து கொண்டே, ரொம்பவே சவாலான விஷயம் தான். சொல்லி கொடுக்கற நமக்கு அதெல்லாம் ஏற்கனவே தெரிஞ்ச விஷயமா இருக்கலாம். வகுப்புல வந்திருக்கற மாணவர்களுக்கு அது புதுசு. அதனால நான் உற்சாகம் குறையாம இருக்கறதுல இருக்கு மேட்டரு.

மேலும் நான் சொன்ன மாதிரி மனசு புது விஷயத்த தேடிண்டு இருக்கணும், கத்துக்கறதுல ஒரு excitement வேணும். போன வாரம் ஒரு random ட்வீட் பாத்தேன். அதுல சில தலைப்பு போட்டு, இதை பத்தி தெரிஞ்சுக்கறவங்களுக்கு அடுத்த பத்தாண்டு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்னு போட்டிருந்தான்.

கிரிப்டோ தானே சார் என்றேன்.

அது சம்பந்த பட்ட சிலபல யுக்திகள், அதுக்கும் மேல பெரிய சூப்பர் மேட்டர் எல்லாம் இருக்கு.

நான் சிரிச்சு கொண்டே, சார் நானே கேக்கணும்னு இருந்தேன். போன மாசம் மலர்ச்சி புக்ல உங்க கட்டுரை படிச்சேன். அதென்ன, சில சமயம் தூய தமிழ், சில சமயம் பேச்சு தமிழ்?

அதற்கு அவர் "occupational hazard" என்றார். ஒரு தத்துவம், ஒரு பொருள், ஒரு concept இதை பத்தி எல்லாம் பேசும் போதோ எழுதும் போதோ தூய தமிழ் வந்திடும். ஏன்னா அது என்னோடது இல்ல. ஆனா அதுக்கு விளக்கம், interpretation கொடுக்கும் போது இயல்பா பேசற தமிழ் வந்துடுது, ஏன்னா அது என்னோடது என்று கண்ணில் நட்சத்திரம் மின்ன சொன்னார். பேச்சு தமிழ்ல எவ்வளவு குறை இருந்தாலும், அதுல ஒரு சுலபம் இருக்கே

அதை விடு, Human IPOனு ஒரு விஷயம் பாத்தேன். ஆச்சரியமா இருந்தது. ஒரு நடிகன், ஒரு விளையாட்டு வீரர், மேடை கலைஞன் அவர்களோட நேரத்தை பணமாக்கற வசீகரம்.

இது தான் எப்போவுமே நடக்கும் சார்?

அவங்க மட்டும் பணமாக்கற மேட்டர் இல்ல. அவங்களோட நேரத்த, அதுவும் எதிர்காலத்துல அவங்க போற நேரத்த பங்கு சந்தை மாதிரி ஒரு எடத்துல வர்த்தகம் பண்ற அசாத்தியம். ரசிகர்கள் எல்லாம் பங்குதாரர்கள் ஆகலாம். அதாவது தோனி, ஜோகோவிச், ரஹ்மான் போல ஒரு விளையாட்டு வீரரோ, கலைஞரோ, அவர்களோட   அடுத்த வருஷ நேரத்த சந்தைல பதிவு பன்றாங்க னு வெச்சுப்போம். ஆமாம் நேரத்த தான் லிஸ்ட் பண்ணுவாங்க. அதை சந்தை விலைக்கு ஏத்த மாதிரி வாங்கி விக்கலாம்

நான் வியந்து வாயை பொளக்கும் முன்னே, அடுத்தத பத்தி பேசுவோம். metaverseனு ஒரு முன்னேற்றம் இணையத்தை கலக்க போகுது. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி "google earth"னு ஒரு பயன்பாடு வந்தது. இது அதை விட நூறு மடங்கு மேல. நீ உக்காந்த எடத்துலையே உலகத்துல இருக்கற எந்த இடத்துக்கும் நிஜமா போகும் படியான உணர்வு குடுக்க முடியும். போறது மட்டும் இல்ல, பேச முடியும், பதிலுக்கு அந்த பக்கம் யாரவது பேசுவதை கேக்க முடியும், பாக்க முடியும். சிந்திச்சு பாரு, இந்தியா ல உக்காந்து கிட்டு, பிரீமியர் லீக் மேட்ச்கு நேர போன மாதிரி ஒரு உணர்வு குடுக்க முடியும். Virtual Reality /Augmented Reality உச்சத்தை தொட்டு, ஒரே ஒரு கண்ணாடிய பொருத்தி மாயத்துக்கும் நிஜத்துக்கும் நடுவுல நம்ம அசத்த போறாங்க.  இதுல அல்டிமேட் கெத்து என்னன்னா, எதிர்காலத்துல  "தொடுதல்" ங்கிற sense of touch உணர்வையும் ஓர் அளவுக்கு கொடுக்க முடியும்னு சொல்றாங்க. கொஞ்சம் சிந்திச்சு பாரு, இது சாத்தியம் ஆனா, தொழில்நுட்பம் மூலம் இறந்து போனவர்களை virtual person ஆக்கி நம்ம முன்னாடி நிக்க வெப்பாங்க. அவங்க குரல் டிஜிட்டலா இருந்துதுன்னா, அவங்களோட பேசலாம். கிட்டத்தட்ட கடவுள் செய்யற வேலை

இதை தவிர, இணையம் வழியா தனது திறமைகளை வெளிப்படுத்தற நிறைய பேர் இருக்காங்க. கலை மற்றும் பொழுதுபோக்கா செய்யற செயல்கள் எல்லாம் இணையம் மூலமா வர்த்தகமா மாற போகுது. இதெல்லாம் சேத்து creator economy னு சொல்றாங்க. இது அசுர வேகத்துல வளர போகுது. இது Web 3.0 முன்னேற்றதோட சேத்து வர போகுது. Blockchainனு சொல்ற தொழில்நுட்பம் பல இயந்திரத்துக்கு கருவா இருக்க போகுது. NFT எல்லாம் ஸ்டார்டிங் பாயிண்ட் தான் னு சொல்றாங்க

 

சார், இவ்வளவு படிச்சு தெரிஞ்சுக்கறீங்களா? நான் நீங்க ஒரு பொருளாதார பேராசிரியர்னு நினச்சேன்

இல்லனா "பழசு" ஆயிடுவோமே!

 

இப்போ என்ன படிக்கறீங்க?

ஜார்ஜ் சொரோஸ்னு ஒரு பொருளாதார மேதை, நிறைய தத்துவங்களை படிச்சிருக்கார். அவர் சந்தைல புரிஞ்சவங்களும், புரியாதவர்களும் சேந்து தான் இருப்பாங்க. புரியாதவர்கள் செய்யும் பரிவர்த்தனைகளும் சந்தையில நடக்கறதுனால அது புரிஞ்சவங்களையும் பாதிக்கும். அப்போ அவங்க புரிதலியே சந்தேக படுவாங்க, மாத்திப்பாங்க. புரிதல் என்பதே.....

 

அவர் தொடர்வதற்கு முன்னே, சார், எனக்கு புரிஞ்சு போச்சு. இதை படிச்சிட்டு நிறைய பேர், google அடிச்சு ஆர்வத்தோடு நிறைய தேட போறாங்க. அவங்க தேடலோட விதை உங்களோடது

அந்த ட்வீட் போட்டவரோடது, என்று மறுத்தார்

“The sole purpose of life has been to pass on what we learned” morgan freeman குரலில் மிமிக்ரி செய்தார். என்ன படம் என்று யோசித்து கொண்டே அந்த கல்லாமை இடத்துக்கு சுத்தி வந்து நின்றேன். அட Lucy!

 

Tuesday, 9 August 2022

தொடர் நிகழ்காலம்

பீடிகை:

எந்த விஷயத்தை சொன்னாலும், அதற்கு முன் வாசிப்பவர்களை தயார் செய்ய வேண்டும்.  என் blog படிப்பவர்களுக்கும், என் மாணவர்களுக்கும் இது நன்றாக தெரியும். தலைப்புக்கும் எழுதுவதற்கும் correlation coefficient பாசிட்டிவாக தான் இருக்க வேண்டும். அந்த கருத்தின் தீவிரத்தன்மையை உள் வாங்குவது அவரவர் beta coefficienடை பொருத்தது.  இந்த அவசர உலகில் சிலர் ஒரு இரண்டு மூன்று நிமிட youtube விடியோவை கூட பொறுமையாக பார்ப்பதில்லை. cursor கொக்கியால் கடைசி வரை தள்ளி, கிளைமாக்ஸ்கு செல்லும் அவசர பிராணிகள் அவர்கள் (சிலர் எனக்கு தெரிந்த செல்ல பிராணிகள் தான்). அவர்களுக்கான செய்தி: இந்த bloகின் முடிவு AR ரஹ்மான் இசையில் "நதி போல ஓடி கொண்டிரு" கொண்ட BGமோடு தான் முடிய போகிறது. 

களம் அமைத்தல்:

நான், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்தான் இதை உணர்ந்தேன். என் நண்பரும் ஆசிரியருமான பரமன் அவர்களின் பதிவுகளின் செய்திகளை படிக்கும் பொழுது இது புலப்பட்டது. அவர் எழுதும் கருத்துக்கள் ஆழமாக இருப்பதோடு அல்லாமல், அது ரசிக்கும் படியாகவும் இருக்கிறது. காரணம் :அது பெரும்பாலும்  தொடர் நிகழ்காலத்தில் உள்ளது. (Google செய்யாதீர்கள்: Present continuous tense). இந்த இலக்கண அமைப்பு சொல்லிற்கு அழகு சேர்ப்பதோடு, நமக்கும் ஒரு உற்சாக செய்தியை சொல்கிறது. என்ன செய்தி என்பது தான் இந்த blog! (சில வருடங்களுக்கு முன்னாள் என் மாணவி சுமேதாவுடன்  (சுப்ரஜாவா???, அவர்கள் இரட்டையர்கள்) Grammar nazi  பற்றி நடத்திய விவாதம் ஞாபகம் வருகிறதே)

கரு:

என் நண்பன் ராமகிருஷ்ணனின் whatsapp statuசில் உள்ள "The show must go on" என்பதே அடிப்படை செய்தி. ஜெயமோகன் எழுதிய அறத்தின் அதிசய மனிதரில் ஒருவர் முதுகு தண்டு ஒடிந்து சிகரத்தின் உச்சியை அடைந்த கதை கண்டிப்பாக ஞாபகம் வரும். எது நடந்தாலும் நதி போலே ஓடி கொண்டிரு என்பது உயரிய லட்சியம் தான். ஆனால் இந்த bloகில் அது போல textbook prescription செய்யாமல் கொஞ்சம் மாறுபட முயற்சிக்கிறேன் ("முயற்சிக்கிறேன்" என்று தொடர் நிகழ்காலத்தில் வேண்டுமென்றே தான் எழுதினேன், எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா, அதில் ஒன்று, இந்த அற்ப சந்தோஷம்   :) )

கதையில கொஞ்சம் ட்விஸ்ட் வேணும்பா:

happiness quotienடை மேம்படுத்த நினைப்பவர்களுக்கு மட்டுமே இனி நான் எழுத போவது. (நீங்கள் அந்த வகையறா இல்லை என்றால், இது வரை படித்ததை, பீச் சுண்டல் மடித்த பேப்பரில் வரும் ஆதியும் அந்தமும் இல்லாத செய்தியை படித்ததை போல் நினைத்து கொண்டு ctrl +w  செய்து விடுங்கள்). வாழ்க்கையில் மகிழ்ச்சி எல்லாம் வேண்டாம், பிரச்சனை இல்லாமல் இருந்தா போதும் என்று ஏங்கும் பலர் இருக்க்கின்றனர். அவர்களுக்கும் இது பொருந்துமென நினைக்கிறேன்.

நமது நிகழ்காலத்தில் நடப்பவைகளே நமது மகிழ்ச்சியையோ (அல்லல் படுவதையோ) தீர்மானிக்கிறது. அது நாம் முன்னால் (கடந்த காலத்தில்) செய்த செயல்களாலும், முடிவுகளாலும் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம் (வடிவேலு சொல்வது போல் "கொஞ்சம் நஞ்சம் ஆட்டமாடா ஆடினீங்க???). ஆனால் நமக்கு நடப்பவைகளை அப்படியே ஏற்று கொள்ளாதீர்கள். முட்டி மோதி மாற்றி கொள்ளுங்கள் (1999 WC Lance Klusener ஆடியதை பாருங்கள்). 

கொஞ்சம் தியரி பார்ப்போம்:

நமக்கு நடப்பவைக்கு இரண்டு காரணம்:

1. நாம்

2. எனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லபா

காரணம் 2 வை கொஞ்சம் கவனமாக வரையரைப்போம்: இது நமது கட்டுப்பாட்டிற்கு கொஞ்சம் கூட எட்டாதவைகள் (Corona lockdown எப்போ முடியும் போன்றவை). கா. 2வை பற்றி நினைத்து மனசோர்வை பெறுவதால், நீங்கள் கா.1க்கு முன்னேறி விடுவீர்கள். (பின்தங்கியா?)

காரணம் 1 பாப்போம்:

நம் அன்றாட வாழ்வின் பிரச்சனைகளாக வருவது (பெரும்பாலாக):

1. ஆரோக்கியம்
2. பணம் / வேலை
3. உறவுகள்


இந்த மூன்றிலும் சிக்கல்கள் இருப்பின், நீங்கள் FM போட்டு கொண்டு நதி போல ஓடி கொண்டிருத்தல் கூடாது. இந்த மூன்றுக்கும் பொறுப்பை எடுத்து கொள்ளுங்கள். பிரச்சனைகளை ஏற்று கொள்ளாதீர்கள், தீர்வு தேடுங்கள்.

1. ஆரோக்கியம்: யோகா சேருங்கள், நடைப்பயிற்சி செய்யுங்கள், மாடிப்படி ஏறுங்கள், உணவு பழக்கங்களை மாற்றுங்கள், சூரிய ஒளி, காற்று, மொட்டை மாடிக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள், whatsapp மூலம் வரும் health tips குறிப்புகளை forward செய்வதோடு கொஞ்சம் செயல்படுத்துங்கள். சுவரில்லாமல் சித்திரம் ஏது??. என் யோகா ஆசிரியை, சவாசனத்தில் "inhale gratitude, exhale surrender " என்று சொன்னது ஞாபகம் வருகிறது

2. பணம்/வேலை : இதை பற்றி இன்னொரு bloகே எழுத வேண்டும். இரத்தின சுருக்கமாக சொன்னால்: உங்கள் தேவைகளை கொஞ்சம் ஆராய்ந்து ஒரு இலக்கை அமைத்து கொள்ளுங்கள், அது multiple லெவல் ஆக இருந்தால் இன்னும் சிறப்பு (வானவில்லை போல் அமைத்து கொள்ளுங்கள்). மற்றவர்களை குஷி படுத்த வேண்டியவற்றை கொஞ்சம் பின்னால்  தள்ளுங்கள். இன்னும் பணம் சம்பாதிக்க வழி தேடுங்கள், இருக்கும் இடத்தில பணி உயர்வுக்கு பாடு படுங்கள், சனி ஞாயிற்று கிழமைகளில் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். உங்கள் தகுதியை உயர்த்தி கொள்ளுங்கள், மேலும் படியுங்கள். நம்பிக்கையோடு வாய்ப்பை தேடுங்கள், எல்லா புலன்களையும் கூராக்கி கொள்ளுங்கள், இன்டர்நெட்டில் தேடுங்கள்.

3. உறவுகள்: இதற்கு ஒரே காரணம் தான்: Ego என்னும் அரக்கன்! தீர்வு: பேரன்பை போல் வேறில்லை!

ஆதாரமா சொல்ல வருவது: விட்ராதிங்க எப்போவ்! "என் தலை எழுத்து" என்று இருந்து விடாதீரகள், மெனக்கெடுங்கள், தேடுங்கள், உடலை வருத்தி தீர்வு காணுங்கள், முன்னேற்றம் வரும். நம் வாழ்க்கையின் சிற்பி நாம் தான். (ஆல் இன் ஆல் அழகுராஜா கவுண்டமணி ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல)  

நம் அன்றாடம் செய்யும் செயல்கள் நமது அன்பின் வெளிப்பாடாக அமைந்தால், தலைப்பில் இருக்கும் இலக்கணத்தை போல Present continuous ஆக இருப்பதோடு வாழ்க்கை continuous present ஆக அமையும் (பஞ்ச் வெச்சு தான் முடிப்போம்).

முடிவுரை:
எனக்கு blog எழுதுவதற்கு உண்டான எண்ணம் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் தோன்றும். தூங்க விடாமல் மூளையை சுறுசுறுப்பாக்கி விடும். சனி கிழமை அதி காலை கிரிக்கெட் வைத்து கொண்டு, முன் நாள் இரவு படுக்கும் பொழுது, இந்த blog தோன்றியது. மூன்று நாட்கள் கழித்தே இதை எழுதுகிறேன் (Present continuous). மூன்று நாட்களாக நடந்த அன்றாட நிகழ்வுகளின் அலுப்பு தட்டி, கரு நீர்த்து போகாமல், உணர்வுகளை அப்படியே எழுத உதவிய என் மூளையின் நரம்பு பட்டைகளுக்கு ஒரு சூடான காபி பரிசளிக்க வேண்டும்!



 



ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most...