கொஞ்ச மாசங்களுக்கு முன் அம்மாவை ஒரு neurologist கிட்ட அழைச்சிட்டு போனேன். அது ஒரு மெயின் ரோட்டில் இருக்கும் கிளினிக். பெரும்பாலும் neurologist யாவரும் வைட்டமின் மாத்திரைகளும் தூக்க மாத்திரைகளும் தருவார்கள் -மூளையை வேற எதுவும் செய்ய முடியாது என்று என் மாமா எப்போதும் சொல்லுவார். அது மனசில் இருந்தது. இருந்தாலும் கொஞ்சம் கிலியும் கலந்தே உள்ளே போனேன். கூட இருப்பவர்களுக்கு உடம்பு சரி இல்லமால் போய், நம்மால் எதுவும் உதவி செய்ய முடியாத நிலையானால் சொல்ல முடியாத அவஸ்தை (helplessness). நரம்பியல் சம்பந்தமாக ஏதோ டெஸ்ட் செய்ய சொன்னார். காலில் ஒரு ஊசி போன்ற கருவியால், எலெக்ட்ரிக் ஷாக் (மெல்லிய) கொடுத்து உரைக்கிறதா என்று பார்க்கும் test. இப்பொழுது, எழுதும் போதே நடு தண்டில் ஏதோ உறுத்துகிறது. அம்மா பயப்படவில்லை.
நான் வெளியே ஒரு waiting ரூமில் இருந்தேன். அப்பொழுது ஒரு நிகழ்ச்சி மனதில் பதிவானது. எதிரே ஒரு குடும்பம் - பதிமூன்று வயது சிறுவன், அப்பா, அம்மா - கூட ஒரு ஆள் - உறவினர் போல தெரியவில்லை. அம்மாவுக்கு தான் உடம்பு சரியில்லை; ஒரு scanக்கு wait பண்ணி கொண்டிருந்தார்கள். scan செய்யும் பொழுது உடம்பில் நகை இருக்க கூடாது என்பதால் நகைகளை கழற்றி ஒரு கர்சிப்பில் சுற்றி அந்த பையனிடம் கொடுத்தாள். அதை அவன் வாங்கும் பொழுது, கை தவறி கீழே போட்டான். அதை குனிஞ்சு எடுக்கும் பொழுது, முதுகில் பளார் என்று ஒரு அடி. "இந்த மூதேவிக்கு உடம்பு சரியில்லைன்னு டாக்டர், test, scan மாத்தி மாத்தி செலவு பண்ணின்ருக்கேன், பொறுப்பே இல்லாம தங்க நகையை கீழே போடறியே". மீண்டும் தலையில் தட்டினார் (கொஞ்சம் பலமாகவே). எல்லார் எதிரிலும் அடி வாங்கின பையனுக்கு கண்ணில் தண்ணீர் ததும்பியது. அடியை விட அவமானமே வலித்தது (பாய்ஸ் படம்). மிக கடினமான உணர்வு -இரண்டும் கெட்டான் வயது. அந்த மனவலியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. வலியுடன் முணகி கொண்டிருந்த அம்மா "முகேஷ் வா இங்கே" என்று கூப்பிட்டு தன் மேல் அவனை சாய்ந்து கொள்ள சொன்னாள் - வாழ்வின் எல்லா வலிகளுக்கும் ஒரே மருந்து - அம்மாவின் மடியும், தோளும்! (கடவுளுக்கும் அம்மா உண்டு போலும்)
பொறுப்பை பற்றி பேசிய அவர் மேல கோபமும், அந்த பையனிடம் நான் பேச முடியாத helplessness - இரண்டும் சேர்ந்து என்னை தாக்கியது.
கொஞ்ச நாட்களில் அந்த பையன் வளர வளர (மூப்பு அப்பாவை செல் அரிக்க)- "அந்த ஆளை பேசாம இருக்க சொல்லு" என்று அப்பா காதில் விழ அம்மாவிடம் சொல்ல ஆரம்பித்து, "ஏய் வாயை மூடிண்டு உன் வேலையை பார்" என்று நேராகவே சொல்லி, "செத்து ஒழியேன்" என்று சாடும் அளவிற்கு செல்லும், அப்பா பையனிடையே ஜென்ம பகையை ஏற்படுத்தும் முதல் நிகழ்ச்சி அது என்று தோன்றியது!

No comments:
Post a Comment