Sunday, 22 November 2015

அரை மயக்கம்

ஆலிவர் ரோடு ஏன் இடம் மாறி இருக்கு என்று எனக்கு புரியவில்லை. Amrutanjan நிறுவனம் இருக்கும் இடத்திற்கும் நாகேஸ்வர ராவ் பார்க்கிற்கும் இடையே ஆலிவர் ரோடு இருந்தது. அப்பா கொஞ்ச நேரத்திற்கு முன் தான் நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் பிடிக்க கிளம்பினார். ஐந்து நிமிடம் கழித்து உடம்பில் வலது பக்கம் பூரா வலிக்கிறது என்று போன் செய்தார். "எங்கே இருக்கே?" என்று கேட்டு நான் உடனே வருகிறேன் என்று சொன்னேன். நான் ஆலிவர் ரோடு சென்ற உடனே, அந்த கிளினிக் கண்ணில் பட்டது. அங்கே போயிருப்பார் என்று தெரிந்து உள்ளே சென்றேன். அப்பா "ஒன்றும் இல்ல டா, இப்போ கிளம்பினா கூட train பிடிச்சடலாம், நீ ஒரு வாட்டி டாக்டர் கிட்ட பேசிடு" என்றார். டாக்டர் இருக்கும் அறைக்கு சென்றேன், எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. நீல ஷர்ட், பழுப்பு பேன்ட் அணிந்திருந்தார். "உங்க அம்மாவை வர சொல்லு, அப்படியே பழைய reports வேண்டும்" என்றார். நான் ஏதோ பேச முற்படுவதற்கு முன் "reports and your mother" என்று ஸ்திரமாக சொன்னார். வெளியே வந்த உடனே டாக்டர் அப்படியே சௌரவ் கங்குலி மாதிரி இருந்தது தெரிந்தது, அந்த கோபமும் கூட!

நான் வெளியே வந்து அம்மாவுக்கு போன் செய்தேன், "வீட்டுக்கு வரேன் மா, நீ ரெடியா இரு" என்றேன்.என் வண்டியை காணவில்லை. புது வண்டி, கறுப்பு நிற ஹோண்டா அக்டிவா. அங்கே இருந்த செக்யூரிட்டி அப்படி, இப்படி தேடிவிட்டு "இதே வேலையா போச்சு, ரோடு கடைசியில ரெக்ஸ் இருக்கு ல, அதுக்கு பக்கத்துல ஒரு வீடு இருக்கு. அங்க mechanic எலாஸ்டிக் (elastic) னு கேளு. இந்த ஏரியால, வண்டிய தூக்கறது அவன் தான்" என்றான். elastic னு ஒரு ஆளுடைய பேரா?? தனுஷ் படத்தில் "அவுட்" என்ற character ஞாபகம் வந்தது. kutchery ரோடு போலீஸ் ஸ்டேஷன் செல்லலாமா என்று யோசித்து கொண்டே நடந்து வந்தேன். ரோடு ஓரத்திலிருந்து பார்க்கும் பொழுது அந்த வீட்டில் ஒரு பழமை தெரிந்தது. வண்டி திருடற கும்பல் இடத்திற்கு போகலாமா என்ற யோசனை. ஒரு திடீர் தைரியம் (sudden bout) - சென்றேன்.

ஒரு பெரிய கேட் போட்ட பெரிய வீடு, வீட்டிற்கு முன்னே நிறைய திறந்தவெளி, பழமை கவ்வியது. பச்சை கலர் பெயிண்ட் கதவிற்கும், ஜன்னல்களுக்கும் அடித்திருந்தார்கள். மழை பெய்து, சுவரில் சுண்ணாம்பு கொஞ்சம் கூட விட்டு வைக்கவில்லை, கொஞ்சம் கரி தட்டி இருந்தது. அந்த வீட்டை நெருங்கிய பொழுது, முகப்பு அறையில் சிலர் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தது தெரிந்தது. அதில் ஒரு முகத்தை கொஞ்சம் கூர்ந்து பார்த்த பொழுது, எனது பழைய அலுவலகத்தின் பாஸ் தெரிந்தார். நான் "mechanic எலாஸ்டிக் இருக்காரா?" என்று கேட்பதற்கு பதிலாக, என் பழைய பாஸ் பெயரை சொல்லி கேட்டுவிட்டேன். 

என் பழைய பாஸ் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு blog பத்தாது. என் முதல் வேலையின் பாஸ் அவர், திறமைசாலி, புத்திசாலி, கடுமையாக உழைப்பவர். எனக்கு நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தார். அலுவலகத்தில் நல்ல பெயர் உடையவர். எனக்கு முதல் வேலை, bachelor days - இளங்கன்று பயமறியாது என்பதை போல, அரசியலுக்கு அப்பாற்பட்டு என் வேலையை நான் செய்வேன். எங்கள் அலுவலகத்தில் அரசியல் செய்யவில்லை என்றால் பிழைக்க முடியாது. இரண்டு வருடங்களுக்கு பிறகு அலுவலக அரசியல் காரணமாக, எனக்கும் அவருக்கும் ஒரு misunderstanding வந்தது. நான் அந்த வேலையை விட்டு வந்து நான்கைந்து வருடங்கள் ஆகி விட்டது. அதனால் அவர் அங்கே இருப்பது கொஞ்சம் குழப்பமாக இருந்தது. ஏன் அவர் இருக்காரா என்று கேட்டோம் என்று தயங்கினேன்.

அவர் வெளியே வந்து, "எப்படி டா இருக்கே" என்று சொல்லி உள்ளே அழைத்து சென்றார். அந்த வீட்டின் அமைப்பும், உள்ள மனிதர்களும் கொஞ்சம் வித்தியாசமாக தென்பட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு உடல் உறுப்பு கொஞ்சம் அளவுக்கு அதிகமாக இருப்பது போல் தோன்றியது. மூக்கு பெரிதாக, காது கொஞ்சம் பக்க வாட்டில் நீளமாக, கொஞ்சம் குள்ளமாக, தலை வீங்கினால் போல்  - ஏதோ சொல்ல தெரியவில்லை. நிறைய பேர் இருந்தார்கள்; கூட்டு குடும்பம் போல தெரிந்தது. நிறைய சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தார்கள். வீட்டில் ஒரு மங்கலான வெளிச்சம், இருட்டு இருந்தது என்றே சொல்ல வேண்டும். எனக்கு இருட்டு பிடிக்காது.  "என் வண்டியை காணோம்" என்று சொன்ன உடனே புரிந்து கொண்டார்கள். என் பாஸ் "எலாஸ்டிக் எங்கே" என்று கேட்டார். Ritchie street போயிருப்பதாக சொன்னார்கள். என்ன வண்டி? என்றார்கள். கறுப்பு அக்டிவா, நம்பர் கூறினேன். 

அவர்கள் பாட்டி போல ஒருவர் காபி சாப்பிடறியா என்று கேட்டாள். தலையில் டை அடித்திருந்தாள், நைட்டி அணிது கொண்டிருந்தாள். வண்டி திருடன் வீட்டில் விருந்து உபசாரம். "இல்ல - என் வண்டி வேணும்" என்றேன். எனக்குள் ஏதோ ஒரு தயக்கம் இருந்தது. கோபம் வர வேண்டிய இடத்தில், கொஞ்சம் தர்ம சங்கடம் போல உணர்ந்தேன். கீழே போய் பார்க்கலாம் வா என்று அழைத்து சென்றார்கள். வீட்டிற்கு உள்ளேயே வழி இருந்தது. உள்ளே ஒரு அறையை தாண்டி செல்லும் பொழுது. நான்கைந்து பேர் தரையில் உட்கார்ந்து ஒரு தட்டில் செம்மண் போல ஏதோ ஒன்றை வைத்து, அதிலிருந்து ஆளுக்கு ஒரு ஒயர் சொருகி வைத்து, ஒயரின் மறுமுனையை தலையில் வைத்திருந்தார்கள். ரொம்ப விநோதமாக இருந்தது.

வீட்டின் கடைசியில் ஒரு படிக்கட்டு போனது, basementக்கு  போனது. அந்த பழைய வீட்டில் basement கட்டுமானமா? வியந்து போனேன். அதுவும் பழங்கால அரண்மனைகளில் சுரங்கபாதை இருப்பது போல் கொஞ்சம் ரகசியமாகவே இருந்தது. இரண்டு அடுக்கு கீழே சென்றோம். கீழே மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் இருக்கும் சந்து வீட்டின் ஒண்டு குடுத்தனம் போல சின்ன சின்ன அறைகள். சில அறைகள் பூட்டி இருந்தது. ஒரு அறையை திறந்து காண்பித்தார்கள். இது தான் லாஸ்டா வந்த வண்டி. அக்டிவா இல்லையே. Splendor எடுத்துக்குங்க என்றார். இல்ல என் வண்டி தான் வேணும் என்றேன். அப்போ எலாஸ்டிக் வந்த உடனே கேட்கலாம், என்று மீண்டும் மேலே அழைத்து வந்தார்கள். 

அங்கே ஒரு நடு வயது பெண் மயங்கி இருந்தாள், அவளை சுற்றி அனைவரும் தண்ணீர் கொண்டு தெளித்து, விசிறி கொண்டும் இருந்தார்கள். என் கூட வந்தவர், "சித்தியை அப்படியே விட்டுடுங்க, தூங்கி போய்டுவா. எழுந்தா BP ரொம்ப shoot ஆயிடும், control பண்ண முடியாது" என்று சொன்னார். அவளை தூக்கி கொண்டு ஒரு அறையில் படுக்க வைத்தார்கள். 

இதோ வந்துட்டானே எலாஸ்டிக் என்று சொன்னார்கள். எலாஸ்டிக் என்பவனுக்கு பதிமூன்று, பதினான்கு வயதிருக்கலாம். குழந்தை முகம். இவனா வண்டி திருடன். ritchie street வஸ்துக்கள் ஏதோ open செய்து ஒயரும் கையுமாய் இருந்தான். அவனை பார்த்தால் ஒரு மேதாவி போல் எனக்கு தோன்றியது (Child prodigy) - ஏன் என்று தெரியவில்லை. இவன் santhome ஸ்கூலில் படித்தானா? என்று சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்டேன். அவன் என் முகத்தை கூட பார்க்கவில்லை. "ஆமாமாம்" என்று கேலியாக சிரித்து கொண்டே ஒரு பெண் கூறினாள்.திடீரென்று என் கழுத்தில் யாரோ கையையோ காலையோ வைத்து அழுத்தினார்கள்!

என் நான்கு வயது மகன் என் கழுத்தில் தன் காலை போட்டு எழுப்பும் வரை, இதை படித்து கொண்டிருக்கும் உங்களை போல, இது ஒரு விசித்தரமான கனவு என்று எனக்கும் தெரியவில்லை! திரும்ப படித்து பார்த்தால் கொஞ்சம் சிரிப்பு வரும்! 

(கொஞ்சம் exaggeration சேர்ந்த உண்மை எப்பொழுதும் சுவாரசியம் என்பார் சுஜாதா)

Sunday, 25 October 2015

I, Robot (We are not)

"Do you think we all are created for a purpose? Because i would love to think so!"

This is a scene in the movie I, Robot, where a robot with (super) artificial intelligence asks another ordinary robot (machine). I would have watched this movie almost every time its on TV. (For some of you guys, to relate it better - number of times this movie is telecast in TV is equal to the Rajini movie "Muthu"). Almost everytime I watch this scene: Goosebumps! (The only other occasion i get goosebumps is when the national anthem is played - தொட்டில் பழக்கம்).

Belief and perceptions:
Perceptions are mostly sensory and are stored as memory cells. Right click and open those memory cell - you can feel them. 
  • MS Dhoni's six to win the world cup
  • Sun rise at Kanyakumari
  • The sight of Taj Mahal
  • Tirunelveli Halwa
  • Haldirams' Rasagulla (refrigerated)
  • Curd rice at home after a week long travel
  • Sunday late evening (weekend is over - got to sleep in a while)
  • Smell of amrutanjan (pain balm)
  • Smell of the earth moments before it rains (petrichor)
  • Solomon Pappiah - என்னய்யா!!!!
  • Your favourite Ilayaraja or ARR song (on a rainy day)
  • That whatsapp message tone
  • when you restart your old nokia phone, the startup tone (dan dan dan dan dan)
As you would have noticed, as you read, your mind opened the relevant memory cell and made you feel all of this (FEEL it - not just relate to it or comprehend or understand it) - these are Perceptions. There are perceptions about people - For instance, at work place, you like some, you dont like a few and there are a few - the sight of whom would irritate you. (Notice that you would have thought of some names for each such category). Computers are imitations of our human mind. Just imagine all these perceptions (out of experiences in the past or hearsay) are files. Every time, we get to think about any of this, the mind opens the file and thats why we feel (and not just relate).

Belief: Belief is hard to describe! Belief cant be explained. There can not be "Why?" and "How" here. I believe - Fullstop! Some belief statements: 
  • I believe in GOD.
  • I believe India will win this match.
  • I believe today is a beautiful day
  • I believe exams are going to be easy
  • I believe this Doctor - I will be better off with the medicine he / she prescribes
  • I believe Federer is the best tennis player 
For instance, you talk statistics to your friend about how many matches Federer has lost to Djokovic and Nadal - He will simply say "Doesn't matter - RF is the best" I guess belief is not a file like perceptions are! Perceptions can change and it can be renewed voluntarily or by time. Belief is probably like the operating systems. And the most important thing is that, perceptions are dictated by belief. You can not have perceptions against your belief. For instance, if you believe that your boss hinders your career (you dont like him or you think he doesn't like you), you can not perceive that you will get a better performance rating this quarter (Only negative perceptions possible). Hence people who have negative perceptions about theirs state of life got to think about belief systems.

So whats the point?
For all those who believe that there is purpose in life, there is so much optimism about living. There is always something to look forward to. There is always an unfinished responsibility to happily hustle towards. There is opportunity  to leave a footprint in this world, try to make this world a better place to live. The drive to attain or achieve the purpose let them take hindrances and failures by the stride. They smile a lot. They create smiles. Purpose is a very powerful motivator!

Are you a guy who keeps cribbing about what you dont have? Take a sheet of paper and write down what you have (than list of things that we dont have), break it into material and intangible ones:

Material ones:
  • To start with, food, cloth and shelter
  • Electricity, internet, vehicles
  • Phones, computer
  • Proximity to your workplace
Intangible ones:
  • Language - how many do you know? Can you read, write and speak a language other than your mother tongue?
  • Sincerity - how many of you are sincere in doing everything?
  • Communication - how many have effective communication skills? Remember English is not the only language in the world - There could be a time in the future where India could outsource activities to England and they could learn Tamil.
  • Speed at work
  • Sense of humour
  • Patience
  • State of health
With a few of them that i have listed out, i think each of you can make a beautiful living, touching so many peoples' lives. It is just that, we have to have the right belief: that life is beautiful, that all of us have a purpose, each of us have a purpose in taking care of our parents, our children, our family, our friends and the society as a whole. All of us have a purpose in passing on to the next generation what we know. Knowledge is not measurable (it does not have a size - it is absurd to call one person to be more knowledgeable than another). A person can teach language to another, help a kindergarten child learn alphabets, can teach people to sing and dance and and swim and recite and type and hold a mouse and use a smartphone, to be sincere, to be punctual, to be loving, to be humorous, to shoulder pain and suffering. You can teach kids how to play. You can help people how to cook, how to dress up. All of us are bestowed with goodness and something that is special and unique. People who believe they have a purpose live a full life and others keep cribbing - no matter how much goodness.

"because HE is at my right hand, I shall not be moved" says Will Smith's grandmother in the climax of the movie. I click the publish button with my right hand now!


PS: (some of them are direct messages)
(How can i write blogs without postscript :) )

To all my student friends who would have heard me talking about 'picking a purpose' - Expand horizons (and hustle - we have very little time left out)!

To my 60 year old maternal uncle (who would definitely be reading this blog) - You would have 'liked' this blog in facebook when i share this despite having a very myopic view on life! (I know you would call me and vehemently deny that there is no purpose in life)

To my friend (and mentor) - Shivram: If you are reading this blog, i know you would have watched the movie today - One more time!!  :)

To myself: 

If, after playing cricket on a sunday morning and sumptuous breakfast at HSB, with the final ODI between India and South africa to start in 5 minutes - I switch off the TV and I commence writing a blog - then I must be super excited! :)

Saturday, 3 October 2015

பொறுப்பு

கொஞ்ச மாசங்களுக்கு முன் அம்மாவை ஒரு neurologist கிட்ட அழைச்சிட்டு போனேன். அது ஒரு மெயின் ரோட்டில் இருக்கும் கிளினிக். பெரும்பாலும் neurologist யாவரும் வைட்டமின் மாத்திரைகளும் தூக்க மாத்திரைகளும் தருவார்கள் -மூளையை வேற எதுவும் செய்ய முடியாது என்று என் மாமா எப்போதும் சொல்லுவார். அது மனசில் இருந்தது. இருந்தாலும் கொஞ்சம் கிலியும்  கலந்தே உள்ளே போனேன். கூட இருப்பவர்களுக்கு உடம்பு  சரி இல்லமால் போய், நம்மால் எதுவும் உதவி செய்ய முடியாத நிலையானால் சொல்ல முடியாத அவஸ்தை (helplessness). நரம்பியல் சம்பந்தமாக ஏதோ டெஸ்ட் செய்ய சொன்னார். காலில் ஒரு ஊசி போன்ற கருவியால், எலெக்ட்ரிக் ஷாக் (மெல்லிய) கொடுத்து உரைக்கிறதா என்று பார்க்கும் test. இப்பொழுது, எழுதும் போதே நடு தண்டில் ஏதோ உறுத்துகிறது. அம்மா பயப்படவில்லை.

நான் வெளியே ஒரு waiting ரூமில் இருந்தேன். அப்பொழுது ஒரு நிகழ்ச்சி மனதில் பதிவானது. எதிரே ஒரு குடும்பம் - பதிமூன்று வயது சிறுவன், அப்பா, அம்மா - கூட ஒரு ஆள் - உறவினர் போல தெரியவில்லை. அம்மாவுக்கு தான் உடம்பு சரியில்லை; ஒரு scanக்கு wait பண்ணி கொண்டிருந்தார்கள். scan செய்யும் பொழுது உடம்பில் நகை இருக்க கூடாது என்பதால் நகைகளை கழற்றி ஒரு கர்சிப்பில் சுற்றி அந்த பையனிடம் கொடுத்தாள். அதை அவன் வாங்கும் பொழுது, கை தவறி கீழே போட்டான். அதை குனிஞ்சு எடுக்கும் பொழுது, முதுகில் பளார் என்று ஒரு அடி. "இந்த மூதேவிக்கு உடம்பு சரியில்லைன்னு டாக்டர், test, scan மாத்தி மாத்தி செலவு பண்ணின்ருக்கேன், பொறுப்பே இல்லாம தங்க நகையை கீழே போடறியே". மீண்டும் தலையில் தட்டினார் (கொஞ்சம் பலமாகவே). எல்லார் எதிரிலும் அடி வாங்கின பையனுக்கு கண்ணில் தண்ணீர் ததும்பியது. அடியை விட அவமானமே வலித்தது (பாய்ஸ் படம்). மிக கடினமான உணர்வு -இரண்டும் கெட்டான் வயது. அந்த மனவலியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. வலியுடன் முணகி கொண்டிருந்த அம்மா "முகேஷ் வா இங்கே" என்று கூப்பிட்டு தன் மேல் அவனை சாய்ந்து கொள்ள சொன்னாள் - வாழ்வின் எல்லா வலிகளுக்கும் ஒரே மருந்து - அம்மாவின் மடியும், தோளும்! (கடவுளுக்கும் அம்மா உண்டு போலும்)

பொறுப்பை பற்றி பேசிய அவர் மேல கோபமும், அந்த பையனிடம் நான் பேச முடியாத helplessness - இரண்டும் சேர்ந்து என்னை தாக்கியது.

கொஞ்ச நாட்களில் அந்த பையன் வளர வளர (மூப்பு அப்பாவை செல் அரிக்க)- "அந்த ஆளை பேசாம இருக்க சொல்லு" என்று அப்பா காதில் விழ அம்மாவிடம் சொல்ல ஆரம்பித்து, "ஏய் வாயை மூடிண்டு உன் வேலையை பார்" என்று நேராகவே சொல்லி, "செத்து ஒழியேன்" என்று சாடும் அளவிற்கு செல்லும், அப்பா பையனிடையே ஜென்ம பகையை ஏற்படுத்தும் முதல் நிகழ்ச்சி அது என்று தோன்றியது!

Tuesday, 30 June 2015

SME and Me!


Post Pre-Script:
Ever since i started blogging, one of my close friends (who is a director in a big 4 audit firm) has been urging to engage myself into technical writing. I have been reluctant. This one is for his encouragement, though I am not sure if this would qualify to be called a "technical blog"!

Small and Medium Enterprises (SME)
I have been engaging with SME's, close to a decade now in various capacities -in the initial years as a banker to SME's, managing their credit requirements and now as a consultant and adviser, helping SME's improve their profitability. One behavioral trait that i have seen with most of them, if not all, is that the majority of a SME entrepreneur's time is spent on non-core issues. Pareto!

If you wiki on Vilfredo Pareto, you would notice that he was an engineer, a sociologist, a political scientist, an economist and a philisopher! His famous 80-20 rule is so much spoken today and as an ode to this great man, i can be sure that "80% (or more) of anything written or spoken about, has a reference to Pareto". One of my HR friends says that we should erect a statue of Pareto in Marina beach (and he says so, not in a lighter vein).

A SME entrepreneur wishes to spend his time on the following:
  • Innovation - product and process
  • Enhancing capabilities - Physical plant capacity, employee capabilities, technical improvement etc
  • Enriching customer experience
  • Expansion - Every SME entrepreneur at all points of time has an "upcoming" expansion plan - could be geographical or across businesses. There is no dearth of ambitions.
However if you carefully map his actual time spent, it would be:
  • Managing finance- Count the number of visits and discussions that he/ she has every week with the banker(s).
  • Battling manpower issues- There is a gap between the time a SME entrepreneur starts seeking the most appropriate person for the job and the time he/she compromises and settles for the actual available candidate (I am not being sarcastic and i am just putting down the sad reality). He/she is also plagued with a lot of attrition - most of the employees do not spend a notice period (actually abscond), leaving the SME with an unexpected vacancy.
  • Compliance with business laws
  • Managing consultants - Practically everything in a SME is outsourced!
Amidst all this, a SME entrepreneur is a super enthusiastic guy who keeps running with his vision intact of making it big! I always think that large corporates do not have as much risk-taking abilities as that of a SME entrepreneur. A large corporate would sit on huge piles of cash and keep looking for risk to be lowered in a particular geography, while a SME entrepreneur would risk all his personal assets in a ruffled market.

In this race that he/she keeps running, they build certain misconceptions - Two of them adds to the trouble  - they perceive that a higher capacity utilisation of the factory line is a healthy sign and money in the bank account is a healthy financial position. They keep borrowing from every credit source and try to run the factory 24/7 and expect a fat bank balance. And when it does not happen, fire-fight to manage recurring payments. Moreover they are never in a position to say "no" to their customers. Their wishlist of spending time on products, processes and customers are intact - however a SME, in more than one way would fall under Pareto's the law of vital few!

There are a few questions that i ask an entrepreneur, (which mostly becomes the task of my job):
  • Are all products manufactured / service provided profitable? Do we know the profitable ones?
  • Do happy and satisfied customers automatically mean profitable customers?
  • Do you know the actual cost of a product / service? (not the anticipated cost and not a periodic total)
  • Are expansion plans financed completely from long term sources?
  • Are you spending too much time on preparing MIS?
  • Are you taking decisions based on MIS reports? (I know organisations that take 10 working days to prepare MIS and spend 45 minutes to discuss them - that too on the veracity of the numbers)
By asking questions (to themselves), I believe a SME can significantly improve their performance. Most of the answers are within the grab of a SME and successful SMEs who transcend to a large corporate are those who fought their way to find answers to these difficult questions. By drawing inspiration from Pareto, philosophically, all human progress has come from asking and answering questions. So ask.......what say?

Saturday, 2 May 2015

தலைவனின் தொண்டர்கள் (தொண்டர்களின் தலைவன்)

முன்குறிப்பு: முதல்வன் படத்தின் தாக்கம், கொஞ்ச நாளாகவே மனதில் இருந்த கேள்விகளின் "synopsis" தான் இந்த கற்பனை interview. (தயவு செய்து பின் குறிப்பையும் படிக்கவும்)

அர்ஜுன் என்பவர் ஒரு துடிப்பான இளைஞர்; நடைமுறையாளர்; journalism பயின்று ஒரு தமிழ் TV சேனலில் நிருபராக வேலை பார்ப்பவர். அவர் நாடெங்கும் போற்றப்படும் "கீர்த்திபூஷன்" என்ற ஒரு "spiritual" குருவை பேட்டி காண்பதே இந்த கற்பனை blog! "அர்ஜுன் : " "கீர்த்தி : " என்று எழுதி உங்களை அவமதிக்க மாட்டேன்.

பேட்டி தொடங்குகிறது

வணக்கம்!

அன்பு! எங்கள் குடும்பத்தினர் அனைவரும் "அன்பு" என்று தான் ஒருவரை ஒருவர் வாழ்த்துவோம், வணங்குவோம். Good morning, good afternoon, good night எல்லாம் கிடையாது! நாங்கள் எல்லோரும் அன்பை ஆதாரமாக கொண்டவர்கள். 

நல்ல விஷயம் தான். ஆனா அது ஒரு "compulsory rule" ஆக செயல்படுத்த வேண்டுமா? Good morning, hi, வணக்கம் சொல்பவர்கள் சொல்லட்டுமே! அவர்கள் அன்பற்றவர்களா?

நாங்கள் யாரையும் வற்புறுத்துவது இல்லை? இது நல்ல பழக்கம் என்று சொல்கிறோம், அவ்வளவு தான்! It is an expression of love, a reminder to love and being loved! Why should not we say so?

இது ஒருஅடையாள குறியா? Is it a way of marketing your organisation? Position your group distinctly? அன்பு என்று வாழ்த்துபவர்கள் உங்கள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்று உலகத்திற்கு சொல்வதற்கா

நாங்கள் அப்படி "marketing" செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை; எங்கள் செயல்களும் வாழ்க்கை முறையும்  போதுமே? People will distinctly notice our lifestyle and happiness! We dont need a signboard for it! We dont need a "catch word" or a slogan"!

But the fact is that you do have a slogan! In fact, every follower of your organisation has to chant the same before he starts his day!

Its not a slogan, its an expression of gratitude to the almighty! தினம் நாங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தும் ஒரு வழிமுறை!

Isn't gratitude an emotion? And people are entitled to emote as they wish, right? Why is it being forced upon every individual? I may close my eyes and say a quick 'thanks' to the almighty! Why isn't that enough?

In today's hustle and bustle, we may forget doing so. It makes a good habit to express our gratitude, isnt it? கடவுளுக்கு நன்றி செலுத்துவது தவறு என்று சொல்லும் நிருபரை இப்பொழுது தான் சந்திக்கிறேன்.

என் கேள்வி கடவுளை பற்றியோ, நன்றி செலுத்துவதை பற்றியோ அல்ல! நீங்கள் ஏன் வழிமுறையை போதிக்க வேண்டும்? அவரவர் அவரவர் வழியில் நன்றி செலுத்தும் சுதந்திரத்தை பற்றி.......(கொஞ்சம் மௌனம்). உங்கள் பெற்றோர் உங்களுக்கு "கீர்த்திபூஷன்" என்று தான் பெயர் வைத்தார்களா?

என் பெற்றோர்கள் எனக்கு கிருஷ்ணன் என்று தான் பெயர் வைத்தார்கள். என் அன்பிற்கு உரிய குடும்பத்தினர்களால் "கீர்த்திபூஷன்"ஆனேன்.

அதாவது உங்கள் சீடர்கள்? தொண்டர்கள்? மாணவர்கள்? உங்கள் "followers" எப்படி சொல்வது என்று தெரியவில்லை.....

என் குடும்பத்தினர், நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.அவர்களை நான் குடும்பத்தினர் என்று தான் அழைப்பேன்.

ok - உங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒரு நாள் ஒன்றாக சேர்ந்து "unanimous" ஆக "கீர்த்திபூஷன்" என்ற பெயரை choose செய்தார்களா? Secret ballot voting முறையா? interesting! anyways, why should you have to rename yourself? what is the need?

அன்பு தான்!

உங்களை போன்றவர்கள், கூட்டத்தில் தனியாக (distinct) தெரிவதற்காக ஏதாவது செய்ய வேண்டுமா? தலப்பா அணிந்து கொள்வது, பெரிய தாடி வைத்து கொள்வது, ஒரே மாதிரி உடை அணிவது, ஒரு "appearance appeal" (கையை கொம்பு போல் செய்து காட்டி) தேவை படுகிறதா?

Appearance is not important! நான் மற்றவர்களின் பார்வைக்கு அழகாக தோன்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாததால் தான் சவரம் கூட செய்து கொள்வதில் இல்லை, அது தான் உண்மை!

(கொஞ்சம் யோசித்து விட்டு) நீங்கள் செய்யும் தொழில் வர்த்தக நோக்கம் கொண்டதா

(agitatedly) That was a provocative question! I will rephrase the question myself - I assume you are asking if my organisation's objective is to make money? The answer is a simple "no". And before you could ask the next question, there is economics in everything. To avail our services, one needs to pay money. Money collected in such form is used to run the organisation, for infrastructure and lot of useful economic activities. To sum up, its not a "profit oriented" organisation, but its a profit making organisation! Money is incidental to our services! I dont think i have to substantiate the CSR activities that our organisation has engaged in! And all that was possible with money only!

But the quantum of money involved is huge, we are talking about crores of followers!

So what, we are a big organisation!

What do you teach? Can you tell me briefly?

(chuckles) Assuming that you do not know - we teach techniques to lead a better and happier life! If that fits into "your" definition of a spiritual guru, yes I am a spiritual guru!

நல்ல விஷயம் தான். ஆனால் நீங்கள் "upper middle class" என்கிற vulnerable sectionஐ மட்டும் target செய்வது வியாபார யுக்தியா

உங்கள் கேள்வியின் உள்நோக்கம் புரியவில்லை?

I feel that the middle class in india is vulnerable and susceptible to "stress" and hence they are desperate in getting a solution to their lifestyle related disease or disorder or disability or whatever! And your organisation targets and fleece them.

I think you answered the question yourself. People who are sick go to the doctor and if you think that a perticular section of people need some service, we would cater to the need! I dont see a problem with that. I dont want to talk about the monetart part of it anymore, i think i already answered it!

I see you are "worshipped" by your followers. You are a living GOD to them. Have you failed to set their expectations right?

I see a pattern in your questioning! Are you trying to point out a maligned motive with me and our organisation?

Let me sum it up, உங்கள் பெயரை மாற்றி கொண்டிருக்கிறீர்கள்; உங்கள் நிறுவனத்திற்கு என்றே ஒரு "distinct behaviour" இருக்கிறது - அன்பு என்று பேசும் போதெல்லாம் சொல்வது, தினம் prayer வழிமுறைகள், uniform, ஒருசெயற்கை தன்மை இருக்கிறது; ஒரு பெரிய "multi level marketing" நிறுவனம்; நீங்கள் ஜாதி மதம் சாரா நிறுவனத்தை அமைத்தல் என்ற பெயரில் ஒரு புதிய மதத்தை தொடங்கி உள்ளீர்கள், நீங்களே அதற்கு கடவுள்! உங்களை worship செய்பவர்களை நீங்கள் தடுக்கவில்லை, ஒரு விதமான "நான் கடவுள்" என்ற மிதக்க நிலையை அனுபவிக்கிறீர்கள்; உலகத்தில் அன்பை போதித்தவர்கள் எல்லாம் "simple" ஆகவே இருந்தார்கள், இருக்கிறார்கள், பணத்திற்காக "lifeskills" எதையும் விற்கவில்லை. ஆனால் உங்களை போல் உள்ளவர்களுக்கு ஒரு "pomp and glory" உள்ளது. உங்களை பார்த்து பேச வேண்டும் என்றால் மணி கணக்காக காத்திருக்க வேண்டும், அதுவும் திருப்பதி பெருமாள் போல சில நொடிகளே, உங்களிடம் "spiritual power" இருப்பதாக நம்புகிற அனைவரின் "network power" மூலமாக தான் உங்கள் நிறுவனம் நடந்து கொண்டிருக்கிறது. "a good teacher makes himself progressively needless" - your organisation is a decade old now, why isnt there a second spiritual guru from your followers? You could not even create one? People who supposedly learn spirituality from you always need you! You have created a craving in their minds; They should constantly keep listening to you, meeting you, following you - so that you always remain as you are! You promote it in a scientific and structured way! Unfortunately, the messenger is being worshipped, the message is lost! நீங்கள் கற்பிக்கும் ஆண்மிகத்தை, தாடி வைத்து கொள்ளாமல், தலப்பா கட்டாமல், எல்லோரையும் போல் ஆடை அணிந்து கொண்டு, உங்களை யாரும் கடவுள் என போற்றாமல், காலில் விழுந்து சேவிக்காமல், ஒரு distinct behavioral pattern உருவாக்காமல், மற்றவர்களை சக மனிதனாக பார்த்து, சொல்லி கொடுக்க முடியாதா என்ன? உங்களை தேடி வரும் "vulnerable" middle class மக்களின் "stress" என்ற மனநோயை exploit செய்து கொள்கிறீர்கள் என்றே நினைக்க தோன்றுகிறது!


(சிரித்து கொண்டே) அவர்களை exploit செய்து என்ன செய்து விட்டேன்?? There are a few things that i want to tell you - சாதரணமாக சட்டை போட்டு கொண்டு,shave செய்த முகத்தோடு அர்ஜுன் என்ற பெயரோடும் நல்ல விஷயங்களை சொன்னால் கேட்பார்களா? எங்கே போய் சொல்வீர்கள்? பார்க், பீச், தெருவோரங்களிலா? ஒரு "platform" வேண்டாமா? அந்த "platform" நாங்களே create செய்தால் தவறா? Simplicity simply does not sell! இன்றைய உலகத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும் marketing யுக்திகள் தேவை. கோயில்களில் பூஜை என்று poster பார்ப்பதில்லையா, பள்ளி கல்லூரிகள் - "எங்களிடம் படிங்க" என்று விளம்பரம் செய்வதில்லையா? மருத்துவமனைகள் தங்களை பற்றி புகழ் படுவதில்லையா? அதனால் அந்த நிறுவனங்கள் தவறான நிறுவங்கள் என்று எண்ணுவது சரியா. நல்ல விஷயங்களை செய்ய விளம்பர படுத்துவதில் என்ன தவறு. நல்ல நோக்கத்தோடும், யாரையும் ஏமாற்றாமல் spirituality சொல்லி கொடுக்க நான் தலப்பா கட்டினால் என்ன, தாடி வைத்து கொண்டால் என்ன, ஒரு "distinct behaviour" உருவாக்கினால் என்ன? தவறா? நம் நாட்டில் சில விஷயங்களுக்கு ஒரு "appearance appeal" தேவை (கீர்த்தி கையை கொம்பு போல் செய்து காட்டினார், அர்ஜுன் மூக்கை தொட்டு பார்த்து கொண்டார்). Distinct ஆக என்னையும், என் நிறுவனத்தை காட்டி marketing செய்து கொள்வதில் என்ன தவறு? நானும் என் நிறுவனத்தாரும் life skills training தான் செய்கிறோம். அதனால் மக்கள் பயனடைகிறார்கள்; அவர்களுக்கு stress என்ற நோயிலிருந்து விடியல் கிடைக்கிறது; அதற்க்கு அவர்கள் கொடுக்கும் விலையே பணம்; இதய நோய் வந்தால் மருத்துவர்களுக்கு நிறைய பணம் கொடுப்பதில்லையா? அந்த பணத்தின் மூலம் பல்லாயிரம் பேர்க்கு வேலை கிடைத்துள்ளது, lot of economic activities - logistics, construction, infrastructure, food and lot of people are benefitted out of it. I pay my taxes properly. உங்கள் பெயரை கொண்ட நடிகர் நடித்த படம் "gentleman" - அது எனக்கு ஒரு inspirational film! அதில் வருவது போல், கிட்டத்தட்ட ஒரு கல்வி கோவிலை கட்டி கொண்டிருக்கிறேன் - for the economically challenged! சாதாரணமான மக்கள் பெருந்தொண்டு ஆற்றி இருப்பதை நானும் அறிவேன். இன்று அது சாத்தியாமா? I have not made personal gains out of this. People in this country wants a leader! They look up at people who take up that responsibility! Most of them don’t want to lead – they prefer being lead – it could be an intelligent choice to them. There are 120 crore people waiting to be lead - so that they can happily carry on their routine lives! How many of them take up their social responsibility! Why can’t I be the leader to all of them and do good to them? The price of taking up this so called "greatness" is responsibility! My intentions are clean and i dont have to prove it; தொண்டர்கள் நிறைய இருக்கும் இந்த "fan following" நாட்டில் நான் தலைவனாக இருக்கிறேன். என்ன தவறு? நான் தொண்டர்களை create பண்ணவில்லை!

அர்ஜுன் யோசித்தான்; அவர் வாதத்தை ஒப்பு கொள்ளவும் தயக்கம்; அவர் சொல்வதில் உண்மை இருப்பது போலும் இருந்தது! என்னை போல, உங்களை போலவும்,  அவனும் யோசித்து கொண்டே அந்த பேட்டியை broadcast section மேலாளருக்கு அனுப்பினான்!
  

பின்குறிப்பு:  
இந்த கேள்விகள் அனைத்தும் என் மண்டையில் ரொம்ப நாளாக ஓடிய கேள்விகள். பதில்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்த பதில்கள். எல்லா கேள்விகளையும் கேட்டு விட்டேனா, எல்லா பதில்களும் முழுமையாக கிடைத்ததா என்று தெரியவில்லை! நீங்களும் கொஞ்சம் யோசிங்களேன்!


ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most...