Wednesday, 30 October 2024

அன்பெனும் பெருவெளி



"Economics", பள்ளி காலங்களில் bore அடிக்கும் பாடமாக இருந்ததில் இருந்து, இப்போது நேரம் கிடைக்கும்  போதெல்லாம் படிக்கும் பாடமாக மாறியது, காலத்தின் விளையாட்டு!  "Animal spirit", "Multiplier effect", "Trickle down effect", "Quantitative easing" போன்ற எத்தனையோ வியப்பை ஏற்படுத்தும் தத்துவங்களை அள்ளி கொடுத்தது economics. ஒரு நாள் டிஜிட்டலாக நல்ல செய்திகளை தேடி மேய்ந்து கொண்டிருந்த போது "Bad outcome is a result of poor circumstances" என்ற வாக்கியத்தை படித்தேன். அதை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். அப்போது என் மனதில் தோன்றிய random thoughts எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கிறுக்கலாக மலர் தொடுக்கிறேன்! இதில் உள்ள சிலவற்றை பற்றி நீங்கள் இணையத்தில் தேடுவீர்கள் என நம்புகிறேன்.

  • ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியின் போது  ஆலங்கட்டி மழை பெய்ய, விளையாட்டு வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியேற, மைதானத்தை மூட அவசர அவசரமாக groundsmen ஓட ஆரம்பிக்க, அவர்கள் தலையில் ஆலங்கட்டி மழை விழுவதை பார்த்த Dean jones கையில் ஆறு ஏழு ஹெல்மெட் எடுத்து கொண்டு groundsmen தலையை காக்க ஓடினான். Dean Jones பற்றி தெரியாதவர்களுக்கு, Ricky pontingன் முந்திய version! No.3ல் வந்து aggressive cricket ஆடும் ஒரு ராட்சச அன்பன்! 
  • உன்னால் முடியும் தம்பி - சமையல்கார தாத்தா - அந்த படத்தில் ஒரு இரண்டு மூன்று நிமிடம் மட்டுமே வந்து, நம் எண்ணத்தை முழுமையாக மாற்றி விடுவார். அவர் ஒரு சினிமா கதாபாத்திரம் என்பதை நம்மால் உணரவே முடியாது. எளிமை என்பது நமக்கு இயல்பானது, இயற்கையானது. sophistication என்பதே சிக்கலானது (complex) என்ற வேறு ஒரு படத்தின் வசனத்தையும் இங்கே நினைவு கூறுகிறேன். உண்மை எளிமையானது (Truth is simple)!
  • Equaliser series படத்தில் Denzel செய்யும் random acts of kindness - நம் மனதிற்குள் இருக்கும் எல்லைகளை கடந்து செல்கிறது. அதில்வரும் ஒரு டயலாக் கண்டிப்பாக நம் பார்வையை மாற்றும்! இந்த படத்தின் ஒரு வசனம்:

             Susan: Why Alina?

            Robert: I cant explain why that girl. But that's not important. Someone does something                               unspeakable to someone and you do something about it, because you can.

            Susan: Because of who you are? who you've always been?

(படம் பார்க்காதவர்களுக்கு, படம் பார்க்க தூண்டும் வகையில் snippet மட்டுமே  கொடுத்துள்ளேன். Prime videoவில் உள்ளது என நினைக்கிறேன்)

  • சிந்தனையை தாராளமாக்குங்கள் என்று என் தம்பி அடிக்கடி கூறுவது!
  • கொரோனா காலத்திற்கு பிறகு K shaped recovery! ஒரு பொருளாதாரத்தில் உள்ள சில அங்கங்கள் வளர்ச்சி காண்பதும், மீதம் இருக்கும் அங்கங்கள் வீழ்ச்சி அடைவதுமே K shaped recovery. K என்ற எழுத்தில் உள்ள ஒரு கோடு மேலே போவதும், இன்னொரு கோடு கீழே போவதும் தான் அந்த குறியீடு. இந்தியாவில் higher income group எனப்படும் பொருளாதாரத்தில் மேலோங்கி இருக்கும் வகுப்பு மட்டும் வளர்ச்சி அடைந்திருப்பதை குறிக்கிறது. சமீபத்தில், Nestle என்ற பிரபல நிறுவனம் "நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் திறன் குறைந்து விட்டது (நடுத்தர வர்க்கம் என்ற பிரிவே குறைந்து விட்டது - Shrinking middle class) என்று அறிவித்திருக்கிறது. 
  • நம் நாட்டில் உள்ள நடுத்தர வர்க்கத்தில், ஒரு சிறிய minority உண்டு. இவர்கள் தொழில் முனைவோரில்லை, வேலைக்கு செல்லும் ஆசாமிகள் தான். இந்த பொருளாதார மாற்றத்தினால் எந்த ஒரு மோசமான பாதிப்பும் இல்லாமல், மாதம் லட்சங்களில் சம்பாதித்து, பங்கு சந்தையில் முதலீடு செய்து தனது முயற்சி எதுவும் இன்றி முதலீடு கோடிகளில் சென்றுவிட, சிறுவர்கள் வீட்டில் இருக்கும் fridgeஐ திறந்து பார்த்து பார்த்து மூடுவதை போல், தனது முதலீட்டை அலைபேசி வழியாக எட்டு மணி நேரம் கண்காணிக்கின்றனர். அவர்கள் பொருள் ஈட்டுவதை நான் குறை சொல்லவில்லை. ஆனால் அவர்களுக்கு ஒரு பிரத்யேக behavioural pattern உண்டோ என்ற சந்தேகம் இருக்கிறது. no 1: ஒரு விதமான insecurity அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. நாட்டில் உள்ள 90% பேரை விட நல்ல பொருளாதார நிலையில் இருந்தும், பாதுகாப்பின்மை எனும் பிணி பிடித்துள்ளது. no 2 (இந்த கட்டுரையில் இவர்களை பற்றி நான் எழுதும் காரணம்): இந்த பாதுகாப்பின்மை காரணமாகவா, அல்லது வேலை பளு காரணமாகவா எனக்கு தெரியவில்லை: ஆனால், இந்த வகையறா மக்களிடம் கொஞ்சம் சமூக பொறுப்பு குறைவாக இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது [கண்டிப்பாக குறைவு தான் :), கொஞ்சம் எழுத்து நாகரிகம் கருதி "எனக்கு  தோன்றுகிறது" என  எழுதியிருக்கிறேன்] இதை படிக்கும் போது, உங்களுக்கு சுய தேர்வு (Self check, self reflection) ஏற்பட்டால் நல்லது. கோபம் வந்தால், நீங்கள் சமீபத்தில் செய்த செய்த act of kindness என்னவென்று உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள் :)  நல்ல பதில் கிடைத்தால், நீங்கள் நான் சொல்லும் குரூப் இல்லை!
  • ஒரு youtube வீடியோவில் ஒரு இசை கலைஞனின் பேட்டி கண்டேன். அதில் அவர் சிறுவயதில் சென்னையின் சிறந்த பள்ளி மற்றும் கல்லூரியில் படித்ததும், தனது குடும்பத்தில் உள்ள பலர் இசை துறையில் தேர்ச்சி பெற்றிருப்பதையும், தனது அத்தையின் பங்களாவில் கிரிக்கெட் விளையாடியதையும், அவரது துறையில் மேதையாக கருதப்படும் ஒருவரிடம் அவர் சில காலம் பயின்றதையும், படிப்பை முடித்து விட்டு முழு நேரம் வேலைக்கு செல்லாமல் இசையில் மட்டுமே அவர் பயணிப்பதையும் கூறினார்.
  • யோகா ஆசனங்கள் செய்யும் போது ஒவ்வொரு ஆசனத்திற்கும் counter pose உடலுக்கு தேவை என்று கற்றுக்கொண்டேன். அதே போல் நாம் படிக்கும், கேட்கும் செய்திகளுக்கும் அது பொருந்தும் என நான் நினைக்கிறேன். அதே நாள், வேறு வீடியோ கேட்க நேர்ந்தது.
  • செய்தி தொலைக்காட்சிகளில் இரவு நேரங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அமர்ந்து விவாதங்கள் செய்வார்கள். இரண்டு வெவ்வேறு சித்தாந்தங்கள் சார்ந்தவர்கள் வாதிடுவதால், அது பெரும்பாலும் சர்ச்சையாக தான் முடிவு பெரும், கூச்சல் இருக்கும், அவமரியாதை இருக்கும்.  அவ்வாறு நடக்கும் விவாதங்களில் ஒரு தனித்தன்மையுடனும்,  பொறுமையாகவும், மரியாதையாகவும், நடுவு நிலைமையோடு அந்த விவாதத்தை நடத்தும் ஒரு தொகுப்பாளர் இருக்கிறார். அவருக்கு விருது வழங்கும் விழாவில் அவர் பேசிய விடியோவை பார்த்தேன். அவர் விருதுநகர் மாவட்டத்தில், ஒரு எளிய குடும்பத்தில், பிறந்து வளர்ந்ததாக கூறினார். தன் தகப்பனார் சிறு சிறு வேலைகளை செய்பவர் என்றும், தன் தாய் தீப்பெட்டி தொழிலாளி என்றும், அவர் பக்கத்து ஊரில் இருக்கும்  தனது உறவினர் வீட்டில் சிலகாலம் வாழ்ந்ததையும் அவர் நன்றியோடு கூறினார். அந்த உறவினரையும், தன் பெற்றோரையும் மேடைக்கு அழைத்து விருதை பெற்று கொண்டார். வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் என்பது வெற்றியல்ல, நன்னெறியோடு வாழ்வதே வெற்றி என தன தாய் சொன்னதை நினைவு கூர்ந்தார். 
  • "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" இதை விட மேலோங்கிய உலகளாவிய வரியை நான் கண்டதில்லை. நீங்கள் கண்டதுண்டோ?? சமீபத்தில் மேற்கு வங்கத்தில் இருந்து வேலை தேடி வந்த சிலர் உணவின்றி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து, அதில் ஒருவர் இறந்து போன செய்தி நெஞ்சை பிதிக்கியது. 
  • யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்!
  • ஆப்பிரிக்கா நாடுகளில் ubuntu என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. அதன் பொருள்: "I am because of who we all are" "நான் நானாக இருப்பது நம்மால் தான்". நாம் அனைவரும் மொழி, இனம், இடம் போன்ற வெவ்வேறு வகைகளில் பிரிந்தாலும், உயிர்நிலையில் ஒன்றாக உள்ளோம். Higgs boson experimentல் "God particle" என்ற ஒன்றை கண்டுபிடித்த நிலையில், சமூக வலைத்தளத்தில் ஒருவர், "நாம் யாவரும் God's particle தானே என்று எழுதியது நினைவுக்கு வந்தது. நிறைய பக்தி இலக்கியங்களிலும், மத நூல்களிலும், இந்த பிரபஞ்சத்தின் சக்தி ஒன்றே, அதன் துகள்கள் தான் நாம் அனைவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. (நான் என்பதே இனி நீ தான் என்ற ஹே ராம் பாட்டின் வரிகள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியாது).
  • ஒலிம்பிக் போட்டியின் மோட்டோவில் "Communiter" என்பதை இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் இணைத்தனர். அதற்கு "Together", "அனைவரும் ஒன்றாக" என்ற பொருள்.  
  • அன்பெனும் பெருவெளி, தயை, வள்ளலார்
  • நான் மேலே எழுதியது ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதது போல் உங்களுக்கு தோன்றினால், "bad circumstances', "privelege", "poor outcome", "species survival" போன்றவை அர்த்தமற்ற "வெறும்" வார்த்தைகளாக இருந்தால்,     Jackie chan ஒரு பேட்டியில் "சந்தோசம் (Happiness)" என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் சொன்னதை யூடியூபில் தேடவும்.

தீபாவளி வாழ்த்துக்கள்!

 

Sunday, 25 February 2024

ஒரு கதை (முயற்சி)

மு.கு. எப்பொழுதும் போல தான். கதை சின்னது தான், கதாபாத்திரங்களை பற்றிய அறிமுகம் கொஞ்சம் விவரமாக எழுதி இருக்கிறேன் . ரத்தின சுருக்கமா இருக்க வேண்டாம் என முடிவு செய்து, படிப்பவர்களுக்கு ஆர்வம் உண்டாக்கும் படியாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு (படித்து விட்டு சொல்லுங்கள்)

கதாபாத்திரம் 1: முருகன் 

முருகன் திருச்சி பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து, படித்து, (நகரத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல்) அங்கேயே வாழ்ந்து கொண்டிருப்பவன்.  தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் பேருந்து ஓட்டுநர். திடமான உடல், பொறுமையாக சிந்தனை செய்யும் குணம் உடையவன். பள்ளி படிப்பு தனது கிராமத்திலே அரசு பள்ளியில் முடித்து, கல்லூரி படிப்பை திருச்சியில் முடித்தான். கிராமப்புற வளர்ப்பு சூழல் என்பதால் அவனுக்கு நீச்சல் தெரியும், விவசாய பம்பு செட்டுகளை சரி செய்வான், தச்சு வேலை வரும், நண்பரின் workshoப்பில் வண்டி பழுது பார்த்திருக்கிறான். கூட்டு குடும்பத்தில் வளர்ந்ததனால் உறவுகளை நேசிப்பவன். அவன் ஊரில் பாடல் பெற்ற சிவாலயம் ஒன்று இருக்கிறது. அந்த கோயில் திருவிழாவில் மாணிக்கவாசகரின் பாடல்களை மனம் உருகி பாடுவான். கைபேசியில் தேவையான youtube வீடியோக்களை பார்ப்பான், அதன் மூலம், சில அரசு திட்டங்கள் பற்றி தெரிந்து கொண்டு, தானும் அதனால் பயன்பெற்று, தன் ஊர்காரர்களும் அந்த திட்டங்கள் பற்றி சொல்லி பயனடைய செய்திருக்கிறான். அதற்காக அரசு அலுவலங்கள் சென்று, விண்ணப்ப படிவம்  பெற்று, வேண்டிய கோப்புகளை சேர்த்து, விண்ணப்பித்து வெற்றி பெற்றிருக்கிறான். (இதில் என்ன வெற்றி என்று நினைப்பவர்களுக்கு கதாபாத்திரம் 2 காத்திருக்கிறது). செய்தித்தாள் தவறாமல் படிப்பான், அரசியலை உன்னிப்பாக கவனிப்பான். பஞ்சாயத்து தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை, ஒரே கட்சிக்கு வாக்களிக்காமல், சூழலுக்கு ஏற்ப யோசித்து சிறந்த வேட்பாளருக்கு வாக்களிப்பான்.  விடுமுறை நாட்களில், வேறு மொழி பேசும் ஊர்களுக்கு  செல்வது அவனுக்கு பிடிக்கும். மாத சம்பளம் (பிடிப்பு போக): இருப்பெத்தெட்டாயிரத்து சொச்சம்.

 கதாபாத்திரம் 2: தீபிகா

தீபிகா, வயது முப்பதுக்கு கீழ் தான். சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணி புரிபவள். வீடு கீழ்பாக்கம், ஒரு அடுக்ககம். மும்பை ரயில்களில் பயணம் செய்வோர்க்கு இது நன்கு தெரியும்: நீங்கள் இறங்க வேண்டிய இடம் வரும் பொழுது, நீங்கள் கதவருகில் நிற்கும் கூட்டத்தில் போய் நின்றால் போதும், உங்கள் முயற்சி இல்லாமல், உங்கள் உந்துதல் இல்லாமல், உங்கள் சம்மதம் இல்லாமல், தானாக நீங்கள் இறக்கி விட படுவீர்கள். அது போல ஒரு குறிப்பிட்ட காலத்தில், பள்ளியில் அறிவியல் குரூப் எடுத்தால் போதும்: தனியார் பொறியியல் கல்லூரிக்கு நான்கு வருடம் கல்லூரி பேருந்து, செமஸ்டர் பரீட்சை, ஐடி கம்பெனி கேம்பஸ் இன்டெர்வியூ என்று தானாக சென்று, படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்மந்தம் இல்லாமல் ஒரு வேலையில் நீங்கள் இருப்பர்கள். அப்படிப்பட்ட முறையில் விமான நிலையங்களில் சுற்றும் கன்வேயர் பெல்ட் மேல் உள்ள பையை போல தன்னிச்சை இல்லாமல், எல்லாமே தீர்மானிக்கப்பட்டு, ஒரு வேலைக்கு செல்பவள் தான் தீபிகா. தன் வேலையை தவிர ஒன்றுமே தெரியாதவள். காலையில் இன்னோவா காரில் ஏறி வேலைக்கு சென்று இரவில் அதே காரில் வீட்டுக்கு அசதியாக வருவாள். தூங்குவாள், விழிப்பாள், ரிபீட்டு! சனி ஞாயிறுகளில் மிச்ச மீதி தூக்கம், ஓய்வு. உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் தெரியாது. நாட்டின் குடியரசு தலைவர் யார் என்று கேட்ட போது: கடைசி நினைவு அப்துல் கலாம் என்பாள்.  இருசக்கர வாகனம்....இல்லை இல்லை, எந்த சக்கர வாகனமும் ஓட்ட தெரியாது.  ஹமாம் சோப்பு வாங்க கூட பொட்டி கடைக்கு போனதில்லை. சென்னையில் எப்பொழுது மழை காலம் என்று கூட தெரியாது. உறவினர்களை வருடத்திற்கு ஒரு முறை கல்யாணங்களில் பார்ப்பாள். பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் பேச நேரம் இல்லை. பேருந்து, ரயில், விமானம் டிக்கெட் வாங்க கூட தெரியாது. கேட்டால்: "இதெல்லாம் எதுக்கு தெரிஞ்சுக்கணும்? வெளியே போக ஓலா, சாப்பிட ஸ்விக்கி, பணம் செலுத்த gpay, வேற என்ன வேணும்?" என்பாள். அதையெல்லாம் கைபேசியில் பதிவிறக்கம் செய்தது அப்பா. உடற்பயிற்சி செய்வது கிடையாது, நடப்பதே இல்லை, எதிர்வீட்டு ஆள் பெயர் தெரியாது, பொருளாதாரம் தெரியாது, பக்தி கிடையாது, அரசியல் நாட்டம் இல்லை, தன் உடலை பேணி காக்க தெரியாது. "ழ"னாவும்  தெரியாது,  "ஷ"னாவும்  தெரியாது, பேரு மட்டும் சுப்ரமணிய பாரதி வகையறா.  சம்பளம் : ரெண்டே முக்கா லட்சம்

நிற்க :

1. இதை படிக்கும் சிலருக்கு, இப்படி எல்லாம் பிள்ளைங்க இருப்பாங்களா? இது மிகை என தோணலாம்.  
2. மேலும் சிலருக்கு, "எங்க வீட்டுல நடக்கறத அப்டியே சொல்றியேபா" என்றும் தோணலாம்
3. இப்படி வாழ்ந்தா தான் என்ன? இதனால என்ன தப்பு? என்றும் தோணலாம் :)

கிளை கதாபாத்திரம் 2A: தீபிகாவின் பெற்றோர்கள்: 

இப்படி ஒரு கதாபாத்திரம் இருந்தால், இவளை கையில் தாங்கும் ஒரு கதாபாத்திரம் இருக்க வேண்டுமே? அறுபது வயதிற்கு மேலான அவளின் பெற்றோர் இருவரின் வேலையும் தீபிகாவிற்கு வேண்டிய அனைத்தையும் பார்த்து கொள்ளுதல். சமையல், சமையலுக்கு உண்டான பொருட்களை வாங்குதல், தீபிகாவுக்கு வேண்டிய பொருட்களையும் வாங்குதல் (தீபிகாவிற்கு, தனக்கு என்ன வேண்டும் என்பதே தெரியாது), துணிமணிகளை வாஷிங் மெஷினில் துவைத்தல், தினம் இஸ்திரி போட்டு அவளுக்கு வைத்தல், அவளின் சம்பளத்தை ஒழுங்காக முதலீடு செய்தல், அலுவலகத்தில் வருடா வருடம் வருமான வரி சம்பந்தமான கோப்புகளை சமர்ப்பித்தல் போன்ற வேலைகளை timetable போட்டு தவறாமல் செய்பவர்களே அந்த மகானுபாவுலுக்கள்! வாழ்க்கை நாம் யாவரையும் தன் பாணியில் சீர் படுத்தும். சிலரை வருடி கொடுத்து செய்யும். சிலரை "வேதம் புதிது" படம் போல் கன்னத்தில் நாலு அறை விட்டு செய்யும். இதை நன்கு அறிந்தவர்கள் தீபிகாவின் பெற்றோர்கள்.

கதாபாத்திரம் 3: பேருந்து 

தனுஷ் படம் மாதிரி இந்த கதையில் பேருந்து ஒரு முக்கிய பாத்திரம். முருகன் வேலையில் சேர்ந்த நாள் முதல், இன்று வரை, ஓட்டும் வாகனம். அவதார் படத்தில் ஜேக் ஒரு பறக்கும் மிருகத்தின் வாலை தன் வாலுடன் சேர்ப்பது போல் முருகனும் பேருந்தும் இணைந்த கைகள். பேருந்து என்பது ஒரு குறியீடு, அதில் செல்லும் மக்களையும், மக்களின் மனதில் இருக்கும் அனைத்தையும் சுமந்து செல்வது. கோபமும், காதலும், சோகமும், சோம்பேறித்தனத்தையும். .....philosophy எல்லாம் வேண்டாம்...உங்களுக்கு, முருகனுக்கும் பேருந்துக்கும்  இருக்கும்  உறவு புரிந்திருக்கும். தற்செயலாக ஏதோ ஒரு நாளில் அந்த பேருந்தில் நீங்கள் ஏறினால், இந்த உரையாடல்கள் கேட்கும்:


"தலைவன் second half ல மாஸ் காட்டிட்டான்" சினிமா விமர்சனங்கள்

"அரசியல் எல்லாம் உணர்வு சார்ந்த விஷயம், அறிவு சார்ந்தது இல்ல, அதனால தான், இவரு இப்படி அர்த்தமா பேசினா டெபாசிட் கூட  வாங்க மாட்டாரு" என்று வாக்காளர்களின் collective intelligenceஐ குறைத்து மதித்து, புது கட்சி தொடங்கியவரின் வெற்றி தோல்வி சாத்தியக்கூறுகளை  விவாதித்தனர்

"கடவுள் நேரே வந்தாருனு வையு, அவர தோள் மேல கைய போட்டு, பக்கத்து ஓட்டல்கு போய், ரெண்டு காபி  சொல்லி, நிறைய கேள்வி கேக்கணும்" என்று இரண்டு பேர்.

"என்னா வெயில் பா?? நான் சின்ன வயசுல இருக்கும் போது இவ்வளவு இல்ல பா" என்ற climate change வாக்குமூலங்கள்

இப்போது கதைக்கு வருவோம், சிறுகதை தான் :  

ஞாயிற்றுகிழமை மாலை, bruce almighty படம் ஓடி கொண்டிருக்க, morgan freeman அதிசயம், அற்புதம் (Miracle) பற்றி பேசி கொண்டிருக்க, முக்கிய கட்டத்தில் தீபிகா pause செய்தாள். "என்ன பெரிய அதிசயம்?" என்றாள். தீபிகா அவள் பெற்றோர்களிடம் பேசும் போது ஒரு மரியாதையற்ற தன்மை இருக்கும். கதாபாத்திர அறிமுகத்தை படித்த உங்களுக்கு "இந்த மாதிரி வேலை செய்யறவங்க இப்படி தான் இருப்பாங்க" என்ற கவுண்டமணி டயலாக் ஞாபகம் வரும். "நான் கடைக்கு போய், ஒரு deodarant வாங்கிட்டு வரேன்" என்றாள். "அதிசயம், அற்புதம்" என்று தீபிகாவின் அம்மா முணுமுணுத்தாள். 

சென்னையில் நடக்கும் தமிழ் மாநாட்டிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட, முருகன் திருச்சியில் இருந்து சென்னைக்கு பேருந்து இயக்கி வந்திருந்தான். சென்னை நகரத்திற்குள் நுழைந்ததும் பேருந்து தனக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்ற சமிஞையை முருகனுக்கு கொடுத்தது. 

தீபிகா அவள் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இறங்கி வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்து எதிரே உள்ள கடைக்கு செல்ல முற்பட்டாள். முருகன் செலுத்தி வந்த கட்டுப்பாடு இல்லாத பேருந்து அவள் கண்ணில் பட, முக்கியமாக கவனத்தில் பட இல்லாத தருணம்.

முருகனுக்கு பேருந்து முழு கட்டுப்பாடு இன்னும் சில நேரம் தான் இருக்கும் என்று தெரிந்து கொண்டான். அவன் பதட்டப்படாமல் மூளையை செலுத்த வேண்டும் என்று முடிவு  செய்தான். பேருந்தில் ஓட்டுநர் பக்கத்தில் ஒரு ஒற்றை இருக்கையை நீங்கள் கவனித்திருப்பார்களா என்று தெரியவில்லை. அங்கே ஒரு சில பேர் மட்டுமே அமர விருப்ப படுவார்கள். ஓட்டுநர் பக்கத்தில் இருக்கும் gearboxஇல் இருந்து  ஒரு அனல் காற்று வீசும். அதை தாங்கி கொண்டு, முழு சாலையின் காட்சியின் மீது உங்களுக்கு காதல் இருந்தால் மட்டுமே அங்கே உட்காருவீர்கள். (என் சிறுவயதில் ஒரு முறை நான் APSRTC பேருந்தில் அவ்வாறு பயணம் செய்த்திருக்கிறேன். திருப்பதியில் இருந்து திருமலைக்கு ghat road இரவு பத்து மணிக்கு மேல் சாலையில் சென்றது இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது)

கதைக்கு வருவோம், முருகனின் நிலையை அந்த பிரத்யேக ஒற்றை இருக்கை ஆசாமி உணர்ந்து கொண்டார். "என்ன சார்? ஏதாவது பிரச்சனையா?" என்றார். முருகன் அவரை ஒரே ஒரு கணம் தான் பார்த்தான். அவருக்கு, இந்த இக்கட்டான சூழ்நிலையை மேற்கொள்ளும் தன்மை உண்டென நம்பினான். சில பேரின் கண்ணை பார்த்தால் அவர்களின் சமநிலையை அறியலாம் என்று நாம் அறிவோம். முருகன், "பேருந்து இடிச்சு தான் நிக்க போகுது, நீங்க கொஞ்சம் எல்லாரையும் உஷாராக்குங்க" என்றான். அவர் துடிப்புடன் செயல்பட்டார். முதல் இரண்டு வரிசையில் உள்ளவர்களை மெல்ல பின்னே செல்ல சொன்னார். பேருந்தின் நிலைமை அனைவருக்கும் தெரிய தொடங்கியது. சிலர் பதட்டம் அடைய போகிறார்கள் என்றும் தெரிந்ததே. அவர் சத்தமாக, "பேருந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது மரத்திலோ, கட்டிடத்திலோ இடித்து நிற்க போகிறது. நீங்கள் கம்பியை பிடித்து கொள்ளுங்கள். பை இருந்தால், உங்கள் முகம், தலை எதிரே  உள்ள கம்பியில் பிடிக்காத வண்ணம் வைத்து கொள்ளுங்கள்" என்று தற்காலிக airbag ஏற்பாடு செய்ய சொன்னார்.

தீபிகா சாலையின் ஒரு பாதியை கடந்து நடுவில் நின்று, மறுபாதியை கடக்க முற்பட்டாள்......ஒரே ஒரு நிமிடம் நிற்க. நான் கதாபாத்திரம் 4 - Dr இனியன் அவர்களை அறிமுகம் செய்யவில்லை. இனியன் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அவசர பிரிவில் வேலை செய்யும் ஒரு மருத்துவர். அவர் அன்றாட வாழ்வில், பதட்டத்திற்கு பஞ்சமே இல்லை. பெரும்பாலும், தீக்காயம் பட்டவர்களும், சாலை விபத்தில் அடிபட்டவர்களும் தான் அவரின் சந்திப்பாளர்கள். அவரிடம் வரும் போது அவர்கள் உடலில் அடிபட்டு நசுங்கி இருக்கும் நிலைமையை சொன்னால், காலையில் சாப்பிட்ட  பொங்கல் வெளியே வந்து விடும். 

முருகனும், அந்த ஒ.இ, ஆசாமியும் சேர்ந்து அந்த பயணிகளை தயார் நிலையில் வைத்து விட்டார்கள். அடுத்து முருகன் ஒரு நல்ல இடமா பாத்து இடிக்க வேண்டும். அந்த கட்டத்தில் பேருந்தை சென்று கொண்டிருக்க, தீபிகா சாலையின் இரண்டாம் பகுதியை கடக்கலாமா என்று யோசித்து கொண்டிருந்தாள். முருகனின் பேருந்து தீபிகா நிற்கும் இடத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் வந்து கொண்டிருந்தது. அவள் சாலையை கடப்பதை ஓட்டுநர் பார்த்தால், பேருந்தை நிதானமாக்கினால் தீபிகா எளிதாக கடந்து விடுவாள். அந்த கட்டத்தில், தீபிகா இரண்டு மூன்று அடி எடுத்து வைக்க, முருகன் கண்ணில் அவள் தென்பட்டாள், ஆனால் பேருந்தை நிதானமாக்க முடியவில்லை என்ற உண்மை தீபிகாவுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.

சில கணங்களில், தீபிகாவின் முதுகை ஒரு மூதாட்டி தட்டி, "நீ குமார் சார் பொண்ணு தானே?" என்று கேட்டாள். தீபிகா சாலையை கடக்க முற்பட்டதை நிறுத்தி, யார் அந்த பாட்டி என்ற யோசனையில் ஆழ்ந்தாள். "இல்ல இல்ல" என்று மறுத்து, மீண்டும் சாலையை கடக்க முற்பட்ட போது, முருகனின் பேருந்து அவளை கடந்து நாற்பது அடி சென்றிருந்தது.

முருகன் திறமைசாலி, ஞாயிற்று கிழமை, பள்ளி விடுமுறை என்று நன்கு அறிந்து, ஒரு பள்ளியின் ராட்சசத்தனமான கதவில் இடித்து பேருந்தை நிறுத்தினான். பேருந்து கண்ணாடி நொறுங்கியது, சிலருக்கு சிறு காயம் தான் ஏற்பட்டது. Sully பட Tom Hanks போல் செயல்பட்டு அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்தான். பேருந்தில் வந்த முதியவள் முருகனை பாராட்ட, அவன் "நான் என்ன பண்ணேன்?, எல்லாம் மேல இருக்கவன் செய்தது" என்று மனமார சொன்னான் . மறுநாள் செயதித்தாளில் நான்காம் பக்கத்தில், இரண்டு வரியில் "அதிசயமாக ஐம்பது பிரயாணிகளும் தப்பித்தனர் "என்ற செயதி வந்தது.

தீபிகா deodrant வாங்கி வீட்டுக்கு வந்தாள், அவள் Dr இனியனை  சந்திக்கவே இல்லை. மறுநாள், அலுவலகத்தில் Fun at work நிகழ்ச்சி என்பதால் நீல நிற டி ஷர்ட் அணிந்து சென்றாள். அதில் இருந்த வாசகம்: "There are only two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle"

பி கு: Final destination பட பாணியில் optimisticஆக ஒரு blog எழுத வேண்டும் என்ற முயற்சி. :)

ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most...