Sunday, 18 June 2017

My fathers in love


என்னை உலுக்கிய இரண்டு சம்பவங்களை பற்றிய blog (கொஞ்சம் அழுத்தமான சமாச்சாரம் தான்)

அப்பா 1:
என் அப்பா ஒரு marketing professional, நாற்பத்து ஏழு வருடங்களாக ஊர் ஊராக சுத்தி கொண்டிருப்பவர். ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு, நெஞ்சு வலி, பாண்டிச்சேரி ஒரு ஹோட்டலில் இருந்தார், அங்கே இருக்கும் ஒரு ஊழியர் அவரை TVS XL சூப்பரில் உட்கார வைத்து அரசு மருத்தவமனையில் சேர்த்தார், heart attack! நள்ளிரவு ஒரு மணி அளவில் எனக்கு செய்தி வந்து நானும் என் குடும்பத்தினரும் பாண்டிச்சேரி சென்று அடையும் பொழுது நான்கரை மணி இருக்கும். ICUவில் அப்பாவை பார்த்தேன். சரியான நேரத்தில் மருத்துவமனை வந்ததால் தப்பித்தார், என்னை வெளியே இருக்கும் படி சொன்னார்கள். நான் கதவருகே நின்று கொண்டிருந்தேன். அங்கே வந்த ward boy, யார் நீங்க என்று அதட்டாலாக கேட்டான். நான் விளக்கினேன். "அவர் பையனா? நல்ல மனுஷன்பா அவர்" என்றான். என்னை உலுக்கி எடுத்த நிகழ்வு அது. இரவு ஒரு மணிக்கு heart attack என்று அட்மிட் செய்ய பட்டு, ICUவில் சிகிச்சை கொடுக்கிறார்கள், குடும்பம் நூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவில், கையில் ஊசி, வாயில் oxygen mask, பதட்டம்! அந்த மூன்று மணி நேரத்தில் என் அப்பா, அந்த ward பாயிடம் என்ன பேசியிருப்பார்? அவன் எதை வைத்து அவர் நல்ல மனிதன் என்று தீர்மானித்தான். வியப்பு! பெருமை!  நிபுணர் என்று பெயர் வாங்குவது எளிது, நல்லவர் என்று பெயர் வாங்குவது கடினம். அதை மிக எளிதாக செய்தவர் என் அப்பா! அப்பா: உன்னை நான் கொண்டாடுகிறேன், every day is a fathers day for me! (இதை படிக்கும் அவருக்கு, அவரின் இந்த பண்பின் அளவற்ற தன்மையும், மற்றவர்களுக்கு அவரால் ஏற்படும் தீவிரத்தையும் புரிந்து கொள்ள முடியாது. இறைவன் சிரித்து கொண்டே அவரை படைத்திருக்கிறான். mark waugh மூன்றாவது slip க்கும் நான்காவது slip க்கும் நடுவே அடிக்கும் boundary போல, அவனுக்கு ஒன்றுமே புலப்படாது, மற்றவர்கள் தான் வியந்து போவார்கள். எத்தனை படித்து, எத்தனை பதவிகள் வந்தாலும், அவரை போல் நானும் நல்லவர் என்று பெயர் எடுப்பது கொஞ்சம் கஷ்டமான target தான்.

அப்பா 2:
என் மனைவியின் அப்பாவும் என் அப்பா தான். இந்த பதிவு, என்னை பற்றியும், என் அப்பாவை பற்றியும், எங்கள் பிரத்யேக உறவை பற்றியும் தான். கொஞ்சம் self centric ஆக இருந்தால் பரவாயில்லை. மற்றவர்கள் பார்த்து பொறாமை பண்ண கூடிய உறவு. எனக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிறது. என்னை "பிரஷாந்த்" என்று முழு பெயர் சொல்லி அழைப்பவர்கள் ஒரு சிலரே, அதுவும் அவரின் கணீர் குரலில் என்னை அழைப்பதே அழகு. கிருஷ்ணன் என்ற பெயர் கொண்ட அவரை என் மனைவி கண்ணா என்று தான் அழைபபாள். நானும் அப்படி தான். ரொம்ப சில நாட்களே மாமனார் - மாப்பிள்ளை உறவு, எனக்கு ஞாபகமே இல்லை (அப்படி இல்லை என்று தான் நினைக்கிறேன்). எப்பொழுதுமே அப்பா - மகனாக தான் இருந்தது. ஒரு மனிதன் ஒவ்வொரு அனுபவத்திலும் ஏதோ ஒன்று கற்றுகொள்கிறான். அதை வளர்ச்சி என்று சொல்லலாம், முதிர்ச்சி என்றும் சொல்லலாம் (ஏதோ ஒன்று). அவர் என் வாழ்வில் வந்த காலம் is the best part of himself, முழுவதுமாக முதிர்ச்சி பெற்றவுடன். எப்பொழுதுமே அனைவருக்கும் உதவி செய்யும் குணமுடையவர். தன்னை iron strong ஆக காட்டி கொள்ளும் குழந்தை உள்ளம் படைத்த வெகுளி. என்னை கொண்டடுபவள் என் அம்மா. என் நற்பண்புகள் மட்டுமே அவள் கண்ணுக்கு தெரியும். என்னை தெரிந்தவர்களுக்கு, என்னை யாரும் கொண்டாடும் படி நடந்து கொள்ள மாட்டேன், கொஞ்சம் முரடன் தான். ஏனோ அவரை மட்டும் என்னை கொண்டாட விட்டு ரசித்து அனுபவித்தேன் (Pamper). நான் தான் ராஜா, நான் சொல்வது எப்போதும் சரி! கர்வம் தலைக்கு ஏறாமல் responsible ஆக ஆனேன். இது என் குடும்பத்தினர் மத்தியில் மட்டுமே.

நானும் அவரும் நண்பர்கள் ஆனோம். நிறைய விஷயங்கள் பேசினோம். நிறைய philosphy and sprituality. எங்களிடம் நிறைய ஒற்ற கருத்துக்கள் இருந்தது. மாற்று கருத்துக்களும் இருந்தது. மாற்று கருத்துகள் உறவை முறித்து விடாமல் இருப்பது, ஒரு நல்ல உறவின் அடையாளம். We differed a lot, knowing clearly, we have bonded for a lifetime! நான் பத்து வருடம் கழித்து (formal education முடிந்து) ஒரு பரீட்சை எழுதினேன் (ஐஐடி நடத்திய ஆன்லைன் கோர்ஸ்). அவர் அதில் இரண்டு எழுதினார். என்னுடன் வினாடிவினா போட்டிகளுக்கு வரும் இளைஞன் அவர். காலை ஐந்து மணிக்கு எழுந்து வீட்டில் உள்ள பணிகளுக்கு அம்மாவுக்கு உதவியாக இருப்பார். நாள் ஒன்றுக்கு ஐந்து கிலோமீட்டர் ஆவது நடப்பார். வியாதி என்பதே கிடையாது. ஒரு நாள் காலையில் பால் வாங்கி வைத்து, washing machine துணியை போட்டு விட்டு, இறைவன் "கண்ணா, வா டா" என்று செல்லமாக அழைக்க, ஜாம் ஜாம் என்று போய் சேர்ந்து விட்டார். ஸ்ரீரங்கம் பெ.பெருமாள் திருவடி!

நான் lesser mortal! பிரிவு தாங்காமல் அழுதேன், என்னை மீறி நான் அழுதது என் வாழ்க்கையில் நிறைய அல்ல. மகாநதி மற்றும் ஆதலினால் காதல் செய்வீர் படம் பார்த்து அழுதேன். நிர்பயா இறந்து போன பின் ரொம்ப அழுதேன்.ஒருவன் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை அவன் முடிவையும் நிர்ணயிக்கும் என்று கற்று கொடுத்து விட்டு சென்றிருக்கார் என் அப்பா. ஒரு மனிதரிடம் நம் அன்பை முழுவதுமாக பரிமாறி விட்டால், பிரிவில் சோகம் கிடையாது என்று அவர் சொன்னதாக என் தம்பி சொன்னான். "கண்ணா, happy father's day"!

பிகு:
Just felt like writing and sharing! I have been writing this blog for a while. It so happened to be fathers' day today. Aptly! Even co-incidence has a pattern.







ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most...