மு.கு: "To be happy for nothing" என்ற உன்னத நிலையில் இன்று காலை பொழுது வந்தது. இப்போ இந்த உலகத்துக்கு ஏதோசொல்லணுமே என்ற திரைப்பட வசனம் மனதில் துடிக்க, இதோ இந்த பதிவு. எப்பொழுதும் அழுத்தமான கருத்துக்களே இருக்கும் எனது பதிவுகளில் இருந்து கொஞ்சம் departure.
நமக்கு பிடித்தவைகளை, நமக்கு பிடித்தவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் மகிழ்ச்சியே! என்னோடைய ரசனை தொலைக்காட்சி வழி வந்தவை. ஒவ்வொரு நிகழ்வுக்கும் நிறைய சான்றுகள் போட்டு, தேங்காய் ஸ்ரீனிவாசன் மகள் ஸ்ரீப்ரியா போல சொல்ல போகிறேன். (விசு வீட்டு வேலை செய்யும் ஊர்வசி போலவும் எடுத்த கொள்ளலாம்)
கிரிக்கெட் தவிர ஒன்றுமே தெரியாத வயது. தூர்தர்ஷன் மூலமாக test cricket ball by ball பார்த்த எருமை பொறுமை காலம். சுந்தரம் நிதி நிறுவனம் போடும் காலெண்டர் வெட்டி எடுத்து நாங்களே scorecard செய்து பார்த்து கொண்டிருந்தோம். கேபிள் டிவி என்னும் ராட்சஸ யுக்தி எங்கள் வாழ்க்கையில் புகுந்தது. கேபிள் வொயரில் பின் சொருகி ரொம்ப நாள் பார்க்கவில்லை. பகல் இரவு கிரிக்கெட் ஆட்டங்கள் தொடங்கின. அசாருதீன் ஸ்லிப்பில் பிடிக்கும் கேட்ச் தான் பெரியது என்று நினைத்து இருந்தோம். Jonty Rhodes என்னும் வாமனன் வந்து எங்களை வாய் பிளக்க வைத்தான். இன்சமாமின் ரன் அவுட் தவிர மேலும் அற்புதங்களை நிகழ்த்தினான். mark taylor அடித்த பந்து டாப் எட்ஜ் வாங்கி off side போக, short மிட் விக்கெட்டில் இருந்து ஓடி பிடித்தான். gully, பாயிண்ட் பகுதியில் இருந்து direct hit அசாதரணமாக செய்தான். சவுத் ஆப்ரிக்கா என்னும் டீம் எங்கள் cricket ரசனையையே மாற்றியது.
குரோனே (cronje) என்னும் சிங்கம், தனது அணி வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் வீரர்களுடன் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்வது உலக யுத்தம். அவன் சூதாட்டத்தில் சிக்கி கொண்டவுடன், போலி சாமியாரின் பக்தர்கள் போல ஏமாந்தோம். சிம்காக்ஸ் மார்க் வாவிடம் வாய் விட்டு மூன்று சிக்சர்கள் வாங்கி கொள்வான். வார்னேவின் அதிசய பந்துகள்: அசிப் முஸ்தபாவை நாளின் கடைசி பந்தில் around the legs bowled செய்யும் மாயம். டாரில் கல்லினன் ஒரு டெஸ்ட் மேட்ச் series பூராகவும் வெச்சு செஞ்சதை மறக்க முடியாது. ஷோயப் அக்தர் என்னும் giant gonzales - யார்கர் போட்டு காலை உடைத்து கொண்டிருந்தான். klusener வந்து அவனுடைய 150 மைல் பந்துகளை சிக்ஸர் அடித்து, பந்து போன திசையை பார்க்காமல், bat கிரிப் சரியாக இல்லையே என்று தட்டி கொண்டிருந்த வித்யா கர்வம். (இதை பின் நாளில் தோனி ஹெலிகாப்ட்டர் சிக்ஸர் அடித்து விட்டு, அதே போல் பந்து போன திசையை பார்க்காமல், பந்து எங்கே பிட்ச் ஆனது என்று பார்ப்பதை கவனித்தேன்).
நிறைய கிரிக்கெட்டுடன் நிறைய திரைப்படங்களும் இசையும் கூட இருந்தது. split personality என்பதை பற்றி மர்ம தேசத்தில் தெரிந்து கொண்டோம். ரிச்சர்ட் கியர் படம் பார்த்து, அடடே இது அதை விட நன்றாக உள்ளதே என்று வியந்தோம். (சுஜாதாவின் ஆ படித்து பின்னாளில் சம நிலை பெற்றோம்). "கடமையை செய்ய லஞ்சம்" என்றும் வசனத்தில் வியக்க, ராஜ் டிவி ஐந்து மணி நேரம் ஒரு பண்டிகை நாள் மாலை எங்களை உட்கார வைத்தது, அவ்வளவு விளம்பர இடைவேளைகள். பிரபு தேவா டான்ஸ் ஆடி எங்களை மடக்கினான். ஊர்வசி ஊர்வசி magic தான். சன் மியூசிக்கில் electronic music அதிக சத்தத்தில் கேட்டு கேட்டு, இளையராஜாவின் இசைக்கு மாறிய maturity எப்பொழுதோ வந்தது.
அவள் கம்பியை அறுத்து தப்பி செல்ல, திரும்பி வந்தவன் ஆக்ஸா ப்ளேடை கன்னத்தில் வைத்து சூடு பார்ப்பது, அம்ஜத் தலையில் அடிப்பட்டு மேலே சாய, ஐயோ அபர்ணா என்று சொல்வது, நேர்மையான கொம்பனை "its a bloody order" என்று சொன்ன உடன் தான் சுடுவது என்று கமல் மண்டைக்குள் கூடு கட்டினார். வட நாடா? இல்ல உள் நாடு தான் என்று சொல்லும் ஆழம் யோசிக்க வைத்தது. ஏன் என்னை மட்டும் இராமனும், காந்தியும் காட்டி நேர்மையா இருக்க சொல்லி கொடுத்தீங்க என்றும் கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லையே? "ஆரிப், தல" என்ற தீர்கத்தில் தான் பதில் போலும்!
மீசையும் வளர்ந்தது, அறிவும் வளர்ந்தது என்று சொல்லி பாலச்சந்தர் கூட சேர்ந்து கொண்டார். முதலில் இருமி கொண்டே இருந்த அம்மாவை, அடுத்த சீனில் வெறும் இருமல் சத்தம் கேட்க வைத்து, அதுத்த சீனில் வீட்டு கதவை திறந்து பார்த்ததும், அம்மா படத்திற்கு மாலை போட்டு, ஒரு characteரை easy ஆக சாக அடித்த சாதுர்யம் வியப்பே. pilfer செய்யும் ஒருவனுக்கு பத்து ரூபாய் பணமும், மனம் மாற செய்யும் அறிவுரையும் கொடுத்து அவனுக்கும் பார்ப்பவர்களுக்கும் நம்பிக்கை கற்று கொடுத்தார். திருமணம் செய்யாத மருத்துவர், கல்யாணம் பண்ணி கொண்டால் என்னால் சரி வர மக்கள் சேவை செய்ய முடியாது என்று climax போது சொல்வது அருமை, ஆச்சரியம்.
எனது பள்ளியில் கற்று கொண்டஆங்கிலத்தை விட, ஸ்டார் மூவிசும், எச் பி ஒ வும் எனக்கு ஆங்கிலம் நிறைய கற்று கொடுத்தது. tom hanks படங்கள் பள்ளிகூடங்களில் சேர்க்க பட வேண்டும் ("mama says so"). ஜிம் கேரி படங்கள் - its gooooood ஆக இருந்தது. In case i dont seeya, good afternoon, good evening and good night என்று சொல்லி வெளியே வருவதை போல், formula மீறிய படங்களை பார்க்க ஆரம்பித்தேன். life will find its way - நிறைய படங்கள் கிடைத்தன. குரங்கு கூடத்தில் இருந்து தப்பித்து, liberty statue பார்த்து அழுவது நெஞ்சில் நின்றவை. If life is there in our planet only, then it is an awful waste of space என்று ஜோடி பாஸ்டர் யோசிக்க வைத்தாள். "what was in my cofin? என்று தொலைந்து கிடைத்த (கிடைத்து தொலைந்த????) tom hanks கேட்டது வியப்பாக இருந்தது. Bruce willis என்னோடைய மசாலா படங்களின் favourite ஹீரோ. விண்கல்லில் இறங்கி ஓட்டை போட்டு கலக்கினான். "come to papa" என்று போலீஸ் காரை கூப்பிடுவது என்னை இன்றும் சிரிக்க வைக்கும். Arnold படங்களை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா? ஒரு கையில் ஒருவனை மலை உச்சியில் இருந்து தலை கீழாக தொங்க விட்டு, "this is my weak hand" என்று சொல்லி மிரட்டுவது வியப்பே.
எழுதவதற்கு ஒரு பதிவு பத்தாது. பள்ளி - கல்லூரி நாட்களில், cricket விளையாடியது போக, கொஞ்சம் படித்தது போக, ரசனையை வளர்த்து கொண்டது உயிரிலே கலந்துள்ளது. எனது உடம்பில் டெஸ்ட் எடுத்தால், டாக்டர் வந்து, ரிஷிகேஷ் கனிட்கர் அடித்த பௌண்டரியும், "விதை என்னோடது, இதெல்லாம் எனக்கு பெருமையா? கடமை" என்ற வசனமும், கொடியிலே மல்லிகைப்பூவில் இளையராஜா வீணையால் கிறுக்கிய "டோயன் டோயன்" DNA வில் அதிகமாக இருக்கிறது என்று சொன்னால் நம்பலாம்.
முடிவுரை: வேண்டும் என்றே தான் படங்களின் பெயர்களும், மேட்சை பற்றிய முழு விவரங்களும் எழுத வில்லை. இந்த பதிவில் இருக்கும் திரைப்பட வசனங்களையும், கிரிக்கெட் நிகழ்வுகளையும் உங்களால் நினைவு கூர்ந்து மகிழ்ந்து போக முடிந்தால் , "இந்த நாட்டில திக்கு திசை மாறி, தடுமாறி போன எத்தனையோ கெட்டிக்கார பையன்கள்ள நீங்களும் ஒருத்தன், சும்மா சொல்ல கூடாது நல்லாவே கெட்டு போயிருக்கிங்க"
:)
Prashanth