Sunday, 18 June 2017

My fathers in love


என்னை உலுக்கிய இரண்டு சம்பவங்களை பற்றிய blog (கொஞ்சம் அழுத்தமான சமாச்சாரம் தான்)

அப்பா 1:
என் அப்பா ஒரு marketing professional, நாற்பத்து ஏழு வருடங்களாக ஊர் ஊராக சுத்தி கொண்டிருப்பவர். ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு, நெஞ்சு வலி, பாண்டிச்சேரி ஒரு ஹோட்டலில் இருந்தார், அங்கே இருக்கும் ஒரு ஊழியர் அவரை TVS XL சூப்பரில் உட்கார வைத்து அரசு மருத்தவமனையில் சேர்த்தார், heart attack! நள்ளிரவு ஒரு மணி அளவில் எனக்கு செய்தி வந்து நானும் என் குடும்பத்தினரும் பாண்டிச்சேரி சென்று அடையும் பொழுது நான்கரை மணி இருக்கும். ICUவில் அப்பாவை பார்த்தேன். சரியான நேரத்தில் மருத்துவமனை வந்ததால் தப்பித்தார், என்னை வெளியே இருக்கும் படி சொன்னார்கள். நான் கதவருகே நின்று கொண்டிருந்தேன். அங்கே வந்த ward boy, யார் நீங்க என்று அதட்டாலாக கேட்டான். நான் விளக்கினேன். "அவர் பையனா? நல்ல மனுஷன்பா அவர்" என்றான். என்னை உலுக்கி எடுத்த நிகழ்வு அது. இரவு ஒரு மணிக்கு heart attack என்று அட்மிட் செய்ய பட்டு, ICUவில் சிகிச்சை கொடுக்கிறார்கள், குடும்பம் நூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவில், கையில் ஊசி, வாயில் oxygen mask, பதட்டம்! அந்த மூன்று மணி நேரத்தில் என் அப்பா, அந்த ward பாயிடம் என்ன பேசியிருப்பார்? அவன் எதை வைத்து அவர் நல்ல மனிதன் என்று தீர்மானித்தான். வியப்பு! பெருமை!  நிபுணர் என்று பெயர் வாங்குவது எளிது, நல்லவர் என்று பெயர் வாங்குவது கடினம். அதை மிக எளிதாக செய்தவர் என் அப்பா! அப்பா: உன்னை நான் கொண்டாடுகிறேன், every day is a fathers day for me! (இதை படிக்கும் அவருக்கு, அவரின் இந்த பண்பின் அளவற்ற தன்மையும், மற்றவர்களுக்கு அவரால் ஏற்படும் தீவிரத்தையும் புரிந்து கொள்ள முடியாது. இறைவன் சிரித்து கொண்டே அவரை படைத்திருக்கிறான். mark waugh மூன்றாவது slip க்கும் நான்காவது slip க்கும் நடுவே அடிக்கும் boundary போல, அவனுக்கு ஒன்றுமே புலப்படாது, மற்றவர்கள் தான் வியந்து போவார்கள். எத்தனை படித்து, எத்தனை பதவிகள் வந்தாலும், அவரை போல் நானும் நல்லவர் என்று பெயர் எடுப்பது கொஞ்சம் கஷ்டமான target தான்.

அப்பா 2:
என் மனைவியின் அப்பாவும் என் அப்பா தான். இந்த பதிவு, என்னை பற்றியும், என் அப்பாவை பற்றியும், எங்கள் பிரத்யேக உறவை பற்றியும் தான். கொஞ்சம் self centric ஆக இருந்தால் பரவாயில்லை. மற்றவர்கள் பார்த்து பொறாமை பண்ண கூடிய உறவு. எனக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிறது. என்னை "பிரஷாந்த்" என்று முழு பெயர் சொல்லி அழைப்பவர்கள் ஒரு சிலரே, அதுவும் அவரின் கணீர் குரலில் என்னை அழைப்பதே அழகு. கிருஷ்ணன் என்ற பெயர் கொண்ட அவரை என் மனைவி கண்ணா என்று தான் அழைபபாள். நானும் அப்படி தான். ரொம்ப சில நாட்களே மாமனார் - மாப்பிள்ளை உறவு, எனக்கு ஞாபகமே இல்லை (அப்படி இல்லை என்று தான் நினைக்கிறேன்). எப்பொழுதுமே அப்பா - மகனாக தான் இருந்தது. ஒரு மனிதன் ஒவ்வொரு அனுபவத்திலும் ஏதோ ஒன்று கற்றுகொள்கிறான். அதை வளர்ச்சி என்று சொல்லலாம், முதிர்ச்சி என்றும் சொல்லலாம் (ஏதோ ஒன்று). அவர் என் வாழ்வில் வந்த காலம் is the best part of himself, முழுவதுமாக முதிர்ச்சி பெற்றவுடன். எப்பொழுதுமே அனைவருக்கும் உதவி செய்யும் குணமுடையவர். தன்னை iron strong ஆக காட்டி கொள்ளும் குழந்தை உள்ளம் படைத்த வெகுளி. என்னை கொண்டடுபவள் என் அம்மா. என் நற்பண்புகள் மட்டுமே அவள் கண்ணுக்கு தெரியும். என்னை தெரிந்தவர்களுக்கு, என்னை யாரும் கொண்டாடும் படி நடந்து கொள்ள மாட்டேன், கொஞ்சம் முரடன் தான். ஏனோ அவரை மட்டும் என்னை கொண்டாட விட்டு ரசித்து அனுபவித்தேன் (Pamper). நான் தான் ராஜா, நான் சொல்வது எப்போதும் சரி! கர்வம் தலைக்கு ஏறாமல் responsible ஆக ஆனேன். இது என் குடும்பத்தினர் மத்தியில் மட்டுமே.

நானும் அவரும் நண்பர்கள் ஆனோம். நிறைய விஷயங்கள் பேசினோம். நிறைய philosphy and sprituality. எங்களிடம் நிறைய ஒற்ற கருத்துக்கள் இருந்தது. மாற்று கருத்துக்களும் இருந்தது. மாற்று கருத்துகள் உறவை முறித்து விடாமல் இருப்பது, ஒரு நல்ல உறவின் அடையாளம். We differed a lot, knowing clearly, we have bonded for a lifetime! நான் பத்து வருடம் கழித்து (formal education முடிந்து) ஒரு பரீட்சை எழுதினேன் (ஐஐடி நடத்திய ஆன்லைன் கோர்ஸ்). அவர் அதில் இரண்டு எழுதினார். என்னுடன் வினாடிவினா போட்டிகளுக்கு வரும் இளைஞன் அவர். காலை ஐந்து மணிக்கு எழுந்து வீட்டில் உள்ள பணிகளுக்கு அம்மாவுக்கு உதவியாக இருப்பார். நாள் ஒன்றுக்கு ஐந்து கிலோமீட்டர் ஆவது நடப்பார். வியாதி என்பதே கிடையாது. ஒரு நாள் காலையில் பால் வாங்கி வைத்து, washing machine துணியை போட்டு விட்டு, இறைவன் "கண்ணா, வா டா" என்று செல்லமாக அழைக்க, ஜாம் ஜாம் என்று போய் சேர்ந்து விட்டார். ஸ்ரீரங்கம் பெ.பெருமாள் திருவடி!

நான் lesser mortal! பிரிவு தாங்காமல் அழுதேன், என்னை மீறி நான் அழுதது என் வாழ்க்கையில் நிறைய அல்ல. மகாநதி மற்றும் ஆதலினால் காதல் செய்வீர் படம் பார்த்து அழுதேன். நிர்பயா இறந்து போன பின் ரொம்ப அழுதேன்.ஒருவன் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை அவன் முடிவையும் நிர்ணயிக்கும் என்று கற்று கொடுத்து விட்டு சென்றிருக்கார் என் அப்பா. ஒரு மனிதரிடம் நம் அன்பை முழுவதுமாக பரிமாறி விட்டால், பிரிவில் சோகம் கிடையாது என்று அவர் சொன்னதாக என் தம்பி சொன்னான். "கண்ணா, happy father's day"!

பிகு:
Just felt like writing and sharing! I have been writing this blog for a while. It so happened to be fathers' day today. Aptly! Even co-incidence has a pattern.







Wednesday, 8 March 2017

ரசனை

மு.கு: "To be happy for nothing" என்ற உன்னத நிலையில் இன்று காலை பொழுது வந்தது. இப்போ இந்த உலகத்துக்கு ஏதோசொல்லணுமே என்ற திரைப்பட வசனம் மனதில் துடிக்க, இதோ இந்த பதிவு. எப்பொழுதும் அழுத்தமான கருத்துக்களே இருக்கும் எனது பதிவுகளில் இருந்து கொஞ்சம் departure.

நமக்கு பிடித்தவைகளை, நமக்கு பிடித்தவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் மகிழ்ச்சியே! என்னோடைய ரசனை தொலைக்காட்சி வழி வந்தவை. ஒவ்வொரு நிகழ்வுக்கும் நிறைய சான்றுகள் போட்டு, தேங்காய் ஸ்ரீனிவாசன் மகள் ஸ்ரீப்ரியா போல சொல்ல போகிறேன். (விசு வீட்டு வேலை செய்யும் ஊர்வசி போலவும் எடுத்த கொள்ளலாம்)

கிரிக்கெட் தவிர ஒன்றுமே தெரியாத வயது. தூர்தர்ஷன் மூலமாக test cricket ball by ball பார்த்த எருமை பொறுமை காலம். சுந்தரம் நிதி நிறுவனம் போடும் காலெண்டர் வெட்டி எடுத்து நாங்களே scorecard செய்து பார்த்து கொண்டிருந்தோம். கேபிள் டிவி என்னும் ராட்சஸ யுக்தி எங்கள் வாழ்க்கையில் புகுந்தது. கேபிள் வொயரில் பின் சொருகி ரொம்ப நாள் பார்க்கவில்லை. பகல் இரவு கிரிக்கெட் ஆட்டங்கள் தொடங்கின. அசாருதீன் ஸ்லிப்பில் பிடிக்கும் கேட்ச் தான் பெரியது என்று நினைத்து இருந்தோம். Jonty Rhodes என்னும் வாமனன் வந்து எங்களை வாய் பிளக்க வைத்தான். இன்சமாமின் ரன் அவுட் தவிர மேலும் அற்புதங்களை நிகழ்த்தினான். mark taylor அடித்த பந்து டாப் எட்ஜ் வாங்கி off side போக, short மிட் விக்கெட்டில் இருந்து ஓடி பிடித்தான். gully, பாயிண்ட் பகுதியில் இருந்து direct hit அசாதரணமாக செய்தான். சவுத் ஆப்ரிக்கா என்னும் டீம் எங்கள் cricket ரசனையையே மாற்றியது.

குரோனே (cronje) என்னும் சிங்கம், தனது அணி வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் வீரர்களுடன் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்வது உலக யுத்தம். அவன் சூதாட்டத்தில் சிக்கி கொண்டவுடன், போலி சாமியாரின் பக்தர்கள் போல ஏமாந்தோம். சிம்காக்ஸ் மார்க் வாவிடம் வாய் விட்டு மூன்று சிக்சர்கள் வாங்கி கொள்வான். வார்னேவின் அதிசய பந்துகள்: அசிப் முஸ்தபாவை நாளின் கடைசி பந்தில் around the legs bowled செய்யும் மாயம். டாரில் கல்லினன் ஒரு டெஸ்ட் மேட்ச் series பூராகவும் வெச்சு செஞ்சதை மறக்க முடியாது. ஷோயப் அக்தர் என்னும் giant gonzales - யார்கர் போட்டு காலை உடைத்து கொண்டிருந்தான். klusener வந்து அவனுடைய 150 மைல் பந்துகளை சிக்ஸர் அடித்து, பந்து போன திசையை பார்க்காமல், bat கிரிப் சரியாக இல்லையே என்று தட்டி கொண்டிருந்த வித்யா கர்வம். (இதை பின் நாளில் தோனி ஹெலிகாப்ட்டர் சிக்ஸர் அடித்து விட்டு, அதே போல் பந்து போன திசையை பார்க்காமல், பந்து எங்கே பிட்ச் ஆனது என்று பார்ப்பதை கவனித்தேன்).

நிறைய கிரிக்கெட்டுடன் நிறைய திரைப்படங்களும் இசையும் கூட இருந்தது. split personality என்பதை பற்றி மர்ம தேசத்தில் தெரிந்து கொண்டோம். ரிச்சர்ட் கியர் படம் பார்த்து, அடடே இது அதை விட நன்றாக உள்ளதே என்று வியந்தோம். (சுஜாதாவின் ஆ படித்து பின்னாளில் சம நிலை பெற்றோம்). "கடமையை செய்ய லஞ்சம்" என்றும் வசனத்தில் வியக்க, ராஜ் டிவி ஐந்து மணி நேரம் ஒரு பண்டிகை நாள் மாலை எங்களை உட்கார வைத்தது, அவ்வளவு விளம்பர இடைவேளைகள். பிரபு தேவா டான்ஸ் ஆடி எங்களை மடக்கினான். ஊர்வசி ஊர்வசி magic தான். சன் மியூசிக்கில் electronic music அதிக சத்தத்தில் கேட்டு கேட்டு, இளையராஜாவின் இசைக்கு மாறிய maturity எப்பொழுதோ வந்தது.

அவள் கம்பியை அறுத்து தப்பி செல்ல, திரும்பி வந்தவன் ஆக்ஸா ப்ளேடை கன்னத்தில் வைத்து சூடு பார்ப்பது, அம்ஜத் தலையில் அடிப்பட்டு மேலே சாய, ஐயோ அபர்ணா என்று சொல்வது, நேர்மையான கொம்பனை "its a bloody order" என்று சொன்ன உடன் தான் சுடுவது என்று கமல் மண்டைக்குள் கூடு கட்டினார். வட நாடா? இல்ல உள் நாடு தான் என்று சொல்லும் ஆழம் யோசிக்க வைத்தது. ஏன் என்னை மட்டும் இராமனும், காந்தியும் காட்டி நேர்மையா இருக்க சொல்லி கொடுத்தீங்க என்றும் கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லையே? "ஆரிப், தல" என்ற தீர்கத்தில் தான் பதில் போலும்!

மீசையும் வளர்ந்தது, அறிவும் வளர்ந்தது என்று சொல்லி பாலச்சந்தர் கூட சேர்ந்து கொண்டார். முதலில் இருமி கொண்டே இருந்த அம்மாவை, அடுத்த சீனில் வெறும் இருமல் சத்தம் கேட்க வைத்து, அதுத்த சீனில் வீட்டு கதவை திறந்து பார்த்ததும், அம்மா படத்திற்கு மாலை போட்டு, ஒரு characteரை easy ஆக சாக அடித்த சாதுர்யம் வியப்பே. pilfer செய்யும் ஒருவனுக்கு பத்து ரூபாய் பணமும், மனம் மாற செய்யும் அறிவுரையும் கொடுத்து அவனுக்கும் பார்ப்பவர்களுக்கும் நம்பிக்கை கற்று கொடுத்தார். திருமணம் செய்யாத மருத்துவர், கல்யாணம் பண்ணி கொண்டால் என்னால் சரி வர மக்கள் சேவை செய்ய முடியாது என்று climax போது சொல்வது அருமை, ஆச்சரியம்.

எனது பள்ளியில் கற்று கொண்டஆங்கிலத்தை விட, ஸ்டார் மூவிசும், எச் பி ஒ வும் எனக்கு ஆங்கிலம் நிறைய கற்று கொடுத்தது. tom hanks படங்கள் பள்ளிகூடங்களில் சேர்க்க பட வேண்டும் ("mama says so"). ஜிம் கேரி படங்கள் - its gooooood ஆக இருந்தது. In case i dont seeya, good afternoon, good evening and good night என்று சொல்லி வெளியே வருவதை போல், formula மீறிய படங்களை பார்க்க ஆரம்பித்தேன். life will find its way - நிறைய படங்கள் கிடைத்தன. குரங்கு கூடத்தில் இருந்து தப்பித்து, liberty statue பார்த்து அழுவது நெஞ்சில் நின்றவை. If life is there in our planet only, then it is an awful waste of space என்று ஜோடி பாஸ்டர் யோசிக்க வைத்தாள். "what was in my cofin? என்று தொலைந்து கிடைத்த (கிடைத்து தொலைந்த????) tom hanks கேட்டது வியப்பாக இருந்தது.  Bruce willis என்னோடைய மசாலா படங்களின் favourite ஹீரோ. விண்கல்லில் இறங்கி ஓட்டை போட்டு கலக்கினான். "come to papa" என்று போலீஸ் காரை கூப்பிடுவது என்னை இன்றும் சிரிக்க வைக்கும். Arnold படங்களை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா? ஒரு கையில் ஒருவனை மலை உச்சியில் இருந்து தலை கீழாக தொங்க விட்டு, "this is my weak hand" என்று சொல்லி மிரட்டுவது வியப்பே.

எழுதவதற்கு ஒரு பதிவு பத்தாது. பள்ளி - கல்லூரி நாட்களில், cricket விளையாடியது போக, கொஞ்சம் படித்தது போக, ரசனையை வளர்த்து கொண்டது உயிரிலே கலந்துள்ளது. எனது உடம்பில் டெஸ்ட் எடுத்தால், டாக்டர் வந்து, ரிஷிகேஷ் கனிட்கர் அடித்த பௌண்டரியும், "விதை என்னோடது, இதெல்லாம் எனக்கு பெருமையா? கடமை" என்ற வசனமும், கொடியிலே மல்லிகைப்பூவில் இளையராஜா வீணையால் கிறுக்கிய "டோயன் டோயன்" DNA வில் அதிகமாக இருக்கிறது என்று சொன்னால் நம்பலாம்.

முடிவுரை: வேண்டும் என்றே தான் படங்களின் பெயர்களும், மேட்சை பற்றிய முழு விவரங்களும் எழுத வில்லை. இந்த பதிவில் இருக்கும் திரைப்பட வசனங்களையும், கிரிக்கெட் நிகழ்வுகளையும் உங்களால் நினைவு கூர்ந்து மகிழ்ந்து போக முடிந்தால் , "இந்த நாட்டில திக்கு திசை மாறி, தடுமாறி போன எத்தனையோ கெட்டிக்கார பையன்கள்ள நீங்களும் ஒருத்தன், சும்மா சொல்ல கூடாது நல்லாவே கெட்டு போயிருக்கிங்க"

:)
Prashanth

ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most...