Saturday, 1 November 2014

Snippets


முதல் துணுக்கு

சுறுசுறுப்பான மதிய வேளை; நானும் என் மகனும் ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தோம்; அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று மூன்று வயதில் இருந்தே "training" கொடுக்க வேண்டும் என்று எனக்கு ஒரு எண்ணம்.  என் மகனுக்கு நல்ல episode கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். பார்சல் (parcel) வாங்கும் இடத்தில் ஒரு நடு வயது மனிதர் கத்தி கொண்டிருந்தார். என்ன பிரச்சனை என்று நான் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் தினம் அங்கே ஒரு கூச்சல் குழப்பம் இருக்கும். தோசை புளிப்பு, பூரிக்கு பதிலாக சப்பாத்தி, தேங்காய் சட்னி இல்லை, தாமதமாக பார்சல் போன்ற தினம் ஒரு திருக்குறள். அன்றும் அது மாதிரி தான். பார்சல் செய்யும் வடகிழக்கு பணியாளன் அவர் சொல்வதற்கு முகம் கூட திருப்பி பார்க்கவில்லை. எவ்வளவு பேரை பார்த்திருப்பான். அந்த மனிதர் மேலாளரை அணுகினார். அவருக்கு இந்த மாதிரி ஆட்களை எதிர்கொள்வதில் அனுபவம் இன்னும் அதிகம். அவர் சொன்னதை கேட்டுவிட்டு "sorry" என்றார். திடீர் என்று அந்த மனிதருக்கு கோபம் குறைந்தது. கொஞ்சம் தாழ்வான குரலில் "being sorry என்பது ஒரு உணர்வு, வெறும் வார்த்தை அல்ல. நாம் அன்றாடம் அதை வெறும் வார்த்தையாக, மூச்சுகாற்றாக பயன் படுத்துவது sorry யான நிலைமை தான்" என்று சொல்லிவிட்டு விருட்டென்று சென்றார். எனக்கும் "food for thought".

Number two

People born in early 80s would understand what i am saying - we have watched television like no body else. The advent of satellite television happened at a very appropriate age to us. Having watched test cricket in doordarshan - star TV (Prime sports as it was called then) was heaven. Remote controls to change channels - even more ecstatic. I never used to switch off my television. I come from school and switch it on and i think my mom will switch it off after i leave to school. I have watched every single cricket match and its highlights. I have watched every single english movie - literally from dawn to dusk. I would say it contributed more to my vocabulary than my school. M Tv used to play a popular hindi song 10 times a day - i have watched it without changing channels during commercials. The horizon kept enlarging - with new channels being introduced; and I remember my cable operator increasing the monthly tariff by saying - 100 channels. 

Why that prelude about TV channels? On a recent sunday afternoon, i tuned into doordarshan podhigai. Ya - you get the drift - I am one of those guys who is affected by this "problem of plenty" television channels and "sensationalise everything" culture - be it sports, movies, news or anything. I get a breaking news that MSD won the toss and elected to field. And there is breaking news 24/7 on all the news channels. Everything today has to be breaking news. I started looking for the "non- breaking" news i would say.  Forget it. 

Lets go to doordarshan podhigai. There was an interview of a mid 50 guy. For no reason i stayed on with the channel and i am glad that i did. The person who was being interviewed was a school dropout from a village, hails from a family of agriculturists and currently has a showroom that deals with servicing electronic goods and selling / servicing cameras. As the interview progressed he started talking about his passion - cameras. He is housing 2000 vintage cameras in his possession and even displayed it a couple of times in an exhibition at the Chennai trade center at its own cost. He helps young students studying visual communication courses to do their projects. 

Then he went on to narrate this - He lives in a rented house amidst the bustle in the heart of chennai, a two storeyed shop cum residence. In his terrace, he feeds parrots. "Thats not new" - i thought. But i stayed on. he feeds 20 kilos of grains in the morning and evening and about 500 to 600 birds fly in and eat in his small terrace. Even more interesting is that, the grains have to be soaked in water, so that it is easy for the birds to eat. And to avoid troublemakers on the road, he stands guard for two hours in the morning and evening. That's been his routine for about a decade and he hardly travels out of chennai to keep them feeding. He narrated his love towards those birds, how he could identify a particular flock, how he faces criticism from his neighbours and passers-by, how it all started. He feels like a parent to those parrots! I was just reminded of Mr. Bharathiyaar - காக்கை குருவி எங்கள் ஜாதி!

மூன்றாம் முடிச்சு

வாழ்வில் சில நினைவுகள் பளிச்சென்று இருக்கும், மறதிக்கு அப்பாற்பட்டது. சில பாடல்கள், சில மனிதர்கள், சில நிகழ்ச்சிகள், சில திரைப்படங்கள், சில எழுத்துக்கள். அது போல் சில திரைப்படங்களில் வரும் உரையாடலை நான் அசை போடுவது உண்டு. அன்பே சிவம் படத்தில் ஒரு கட்டத்தில் மாதவன் "என்ன ஒரு intelligent design" என்று கடவுள் மேல் கோபம் கொள்வார். கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் - அப்படி தான் போலும் என்று தோன்றும். நாமும் அவர் போல் - இல்லை நான் கடவுளை நிந்திக்க மாட்டேன் என்று உடனே மாற்றி கொள்வோம் என்று தோன்றுகிறது. தொலைகாட்சியில் ஒரு விவாத மேடை நிகழ்ச்சியில் தீபாவளி ஏன் சந்தோஷமாக இல்லை என்று விவாதம். நானோ "எந்த நாளும் இனிய நாளே" கட்சி. தொடர்ந்து பார்த்தேன். அதில் ஒருவர் முன்பெல்லாம் ஒரு பண்டிகையை கொண்டாடுவதில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது, அது இப்பொழுது இல்லை என்றார். உண்மை தானோ என்று யோசித்தேன். சிறு வயதில் புத்தாடைக்கும், இனிப்பு பலகாரங்களுக்கும், நண்பர்களுடன் சேர்ந்து விடுமுறையை கொண்டாடும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்பொழுது அது கண்டிப்பாக இல்லை. ஏனெனில் ஆடைகளும் இனிப்பு பலகாரங்களும் எப்பொழுதும் கிடைக்கிறது. அதனால் எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், சந்தோஷம் "எதிர்பார்ப்பு" என்பதில் இல்லை. இன்றைய காலத்தில் எதிர்பார்ப்பு மன இறுக்கத்தை (stress) தான் ஏற்படுத்திகிறது. சந்தோஷத்திற்கு காரணம் இளமை பருவம் தான். இனிப்பும், புத்தாடைகளும் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் இளமை பருவம் சந்தோஷமே!

இப்பொழுது, "படிப்பு" தான் வாழ்க்கை என்று ஓடும் மாணவர்களும், "காதல் தான் வாழ்க்கை என்று ஓடும் இளம் பருவத்தினரும், "நட்பு" தான் வாழ்க்கை என்று இளைஞர்களும், "பணம்" தான் வாழ்க்கை என்று ஓடும் திருமணம் முடித்தவர்களும், "பிள்ளைகள்" தான் வாழ்க்கை என்று ஓடும் நடுத்தர வயதினரும், "உடல்நிலை" (health) தான் வாழ்க்கை என்று நிறைய ஓடியவர்களும், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தில் ஒன்றையே நினைத்து ஓடி ஓடி மற்றதை இழக்கிறார்கள். சந்தோஷம் தான் வாழ்க்கை என்று நினைத்து நடந்து போகும் என்னை போன்றவர்களுக்கு, அந்த ஓட்டம் சில நேரங்களில் வேடிக்கையாகவும், சில நேரங்களில் சவாலாகவும் இருக்கிறது. நிஜமாகவே இது intelligent design தான். என்னை நடத்தி செல்ல பாரதி இருக்கின்றான்.

" தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி பின்மாயும்
சில வேடிக்கை மனிதரை போல
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"

முடிவுரை:
நான் இந்த bloகை publish செய்யம் முன்னே மீண்டும் படித்து பார்த்து proof-read செய்தேன் (சென்ற bloகில் எக்கச்செக்க எழுத்து பிழைகளை செய்து விட்டது இந்த google text services tool). அப்பொழுது மூன்று துணுக்குகளும் சம்பந்தம் இல்லாமல் இருப்பதை கவனித்தேன். ஒரு மாதிரி வாழ்கையின் theme போல் தோன்றியது. முன்னுக்கு பின் சம்பந்தம் இல்லாமல் (சம்பந்தத்தை புரிந்து கொள்ள முடியாமல்) இருக்கும் அனுபவங்களின் குவியல் தான் வாழ்க்கை என்று தோன்றியது. Definitely an intelligent design - my dear lord! எல்லாம் வல்ல இறைவன் என்று சொல்லிக்கொண்டே "publish" செய்கிறேன்!

ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most...