அன்று
நாங்கள் இருப்பது ஒரு வாடகை வீடு; இப்பொழுது நிறைய மாறிவிட்டது. நான் எழுதுவது ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்ததை பற்றி (இன்னும் கூட முன்னே). மற்றும் இதை எங்களை போல் நிறைய cricket சுவாசித்தவர்களால் இன்னும் relate செய்ய முடியும் என்று நம்புகிறேன். இதில் வருபவர்கள் கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல; என் நண்பர்கள் என்பதால் பெயரை கூட மாற்ற போவதில்லை. எங்கள் வீடு ஒரு குட்டி colony போன்ற அமைப்பு என்று கூறலாம். நிறைய portionகள் இருந்த ஒரு வீடு; ஆனால் ஒண்டு குடித்தனம் இல்லை; தனி தனி portion. நிறைய மரங்கள், நிறைய திறந்த வெளி இருந்தது. நிறைய நண்பர்கள்!
வீட்டிற்குள் நுழைய ஒரு சிறு gate உண்டு; வீட்டின் சொந்தகாரர் மட்டும் car வைத்திருந்தார்; அது செல்ல தனியே பெரிய gate. car நிறுத்த ஒரு பெரிய shed. வீட்டிற்கு நுழையும் இடத்தில ஒரு திறந்த வெளி - எங்கள் cricket ground! அது ரொம்ப பெரியதும் கிடையாது, சிறியதும் கிடையாது; cricket விளையாடுபவர்களுக்கு இது புரியும் - bowling போட்டு விளையாட முடியாது, under arm அளவிற்கு சிறியதும் இல்லை. அது தான் எங்கள் உலகம். ஒரு பக்கம் சுவற்றிலே கோடு வரைந்த stump, இன்னொரு பக்கத்திலே சுவறு தான் boundary, எனவே வேறு ஒரு திசையில் (பக்கவாட்டில்) இருக்கும் சுவறு தான் stump. அந்த grounடின் சரியாக நடுவே, ஓரத்தில் ஒரு அரளி செடி உண்டு, ஒரு ஓணான் குடும்பமும் வசித்து வந்தது. அதை தாண்டி பந்து சென்றால் தான் legitimate runs. batting creaசுக்கு பின்னால் மனோரஞ்சித மரம் உண்டு. மிகுந்த வாசனை கொண்ட பூக்களை கொண்டது. தெருவில் நடக்கும் சிலர் அதை பறிக்க வருவார்கள். சிறுவர்களானால் நாங்களே மிரட்டி அனுப்புவோம், கொஞ்சம் கெட்ட வார்த்தை பேசும் அளவுக்கு இருந்தால் சக்தி அண்ணனை கூப்பிடுவோம். அவர் தான் எங்கள் வீட்டு சொந்தக்காரரின் மகன். சுமார் இருபது ஐந்து வயது இருக்கும், தைரியசாலி, எல்லா வேலைகளும் செய்வார் - தோட்ட வேலை, plumbing, carpentry - எங்கள் வீட்டிற்கு வெளி ஆட்கள் வேலைக்கு வந்ததே இல்லை. அவர் சகலகலா வல்லவர். நாங்கள் விளையாடும் பொழுது ஒரு ஓவர் "காஜி" (இதை ஆங்கிலத்தில் எழுதவே கூடாது) போட வேண்டும்.
விஜயராகவன் என்ற விஜய் தான் கிரிக்கெட் சாம்பியன், அவனை out ஆக்கவே முடியாது. முரட்டுதனமாக boundary அடிப்பான். அபாரமாக விளையாடுவான். bat, ball போன்றவையும் கொண்டு வருவான், அவன் வைத்தது தான் சட்டம். ஒரு மாதிரி Dominant என்று சொல்லலாம். அவன் வீட்டில் உள்ளவர்கள் ரொம்ப நல்லவர்கள், வைணவ சம்ப்ரதாயங்களை கடைபிடிப்பார்கள், ஒழுக்கம், நெறிமுறை போன்றவை தான் அவர்கள் வீட்டிற்கு முக்கியம். அவர்கள் வீட்டிற்கு நாங்கள் செல்ல மாட்டோம், வாசலில் தான் நின்று பேசுவோம்.ஏனோ தெரியவில்லை. அவனுக்கு ஒருவர் வீட்டிற்கே வந்து violin சொல்லி கொடுப்பார். அவர் வரும் பொழுது ஒரு boundary அடித்து விட்டு உள்ளே ஓடுவான், ஒரு மணி நேரம் கழித்து வந்து விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து அடிப்பான். அவன் வரும் வரை புதிய match விளையாடினாலும் அவன் வந்தால் அப்படியே அதை கைவிடுவோம். அவன் cousin ஒருவன் பத்மநாபன் என்ற பப்பா படிப்பதற்காக இவர்கள் வீட்டில் இருந்தான். அவன் சுமாராக விளையாடுவான். ஆனால் எப்பொழுதும் விஜய் சொல்வதை தான் correct என்று சொல்லும் ஜால்ரா.
விஜயின் நண்பன் கணேஷ்ராம் பக்கத்துக்கு தெருவில் வசிப்பவன், அவன் திடீரென்று கோபப்படும் சுபாவம் கொண்டவன். விஜயும் அவனும் ஒரே பள்ளி ஒரே கிளாஸ் - இருவர்க்கும் எல்லா விததிலும் போட்டி உண்டு. விஜய் மாற்ற விஷயங்களிலும் dominant ஆக தான் இருந்திருக்க வேண்டும். இவர்கள் இருவரும் சண்டை போடுவதில் பார்த்தால் புரியும்.கணேஷ்ராம் அதிரடியாய் ஆட மாட்டான், ஆனால்அவன் விளையாட்டில் ஒரு மென்மையான அழகு இருக்கும் -கொஞ்சம் மிகை படுத்தி கூறினால் mark waugh நான்கு slip, gully நடுவே அடிக்கும் square cut போல இருக்கும்.
இனி என் இனிய நண்பன் - ஷங்கர் என்னும் காக்கா, தெலுங்கு பேசுபவன், இடது கை பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் artistic and creative என்று கேள்வி பட்டிருப்போம். இவன் இப்படி தான். நான் இந்த வீட்டிற்கு குடி வந்த பொழுது ஷங்கர் batting ஆட விஜய் bowling போட்டு கொண்டிருந்தான் - ஷங்கர் போட்டு கொண்டிருந்த kapil dev sweater கூட ஞாபகம் இருக்கிறது (இதை படித்து கொண்டிருக்கும் ஷங்கர் - அது முன்னே V shape இல் இருக்கும், பழுப்பும் browனும் சேர்ந்த அசிங்கமான கலர்). அவனுக்கு skin allergy வருவதால் மருத்துவர் மண்ணில் விளையாட கூடாது என்று சொல்லி விட்டார். அவன் அம்மா வெளியே சென்றவுடன் எங்களுடன் விளையாடி, அம்மா திரும்பும் பொழுது மாட்டி கொள்வான். நானும் அவன் அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறேன். அம்மா வந்ததும் கை கால் கழுவி புத்தகத்தை எடுத்து உட்கார்ந்து கொள்ளும் எமகாதகன். எனக்கு அவ்வளவாக நடிக்க வராது. ஷங்கர் left hand என்பதால் நாங்கள் bowling போடுவதில் கொஞ்சம் சிக்கல் இருக்கும். திறமை சாலி, நன்றாக விளையாடுவான். நிறைய விளையாடியதில்லை; அம்மா வீட்டில் இருந்தால் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பான், சண்டை வந்தால் அவனிடம் செல்வோம். விஜய்க்கு பயப்படாமல் out என்றால் out தான் என்று தீர்ப்பு சொல்லும் நாட்டாமை. எனக்கு பள்ளியில் எதாவது project work இருந்தால் ஷங்கர் தான் செய்து கொடுப்பான். எனக்கு படம் வரைவது, craft work செய்வது, ஓட்டுவது, வெட்டுவது போன்ற எதுவுமே வராது. fevicoலின் வாசனை மட்டும் தான் பிடிக்கும். கையெழுத்தும் கோழி கிறுக்கல். முன்னெல்லாம் கல்யாணங்களில் தேங்காய் பழத்துடன் ஒரு சிறிய கண்ணாடி கொடுப்பார்கள். ஒரு notebook அட்டையை மடக்கி, வெட்டி, அதில் இந்த கல்யாண கண்ணாடியை பொருத்தி எனக்கு ஒரு periscope செய்து கொடுத்தான். வல்லவன்!
ஷங்கரின் அண்ணன் ரமணி - அதி புத்திசாலி! cricket எல்லாம் ஆடவே மாட்டான். எப்பொழுதும் படிப்பு தான். பாடம் எல்லாம் சீக்கிரம் முடித்து விட்டு வேறு ஏதேதோ படிப்பான். எங்களுக்கு எல்லாம் quiz வைப்பான். cricket விளையாடாமல் புத்திசாலியாய் இருக்க முடியுமா என்று எனக்கு எப்பொழுதும் சந்தேகம் உண்டு. ஆனால் cricket பற்றிய எல்லா விவரமும் அவனுக்கு தெரியும். நாங்கள் computeரை பாட புத்தகத்தில் படமாக பார்த்த பொழுது அவன் ஒரு வங்கிக்கு ஏதோ computer வேலை செய்து கொடுத்தான்.
என்னை பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். அந்த கும்பலில் நான் தான் இளையவன். மிக ஒல்லியாக இருப்பேன். cricket தான் என்னுடைய உடல்-பொருள்-ஆவி எல்லாம். crickeடுக்காக எதை வேண்டும் என்றாலும் செய்வேன். விளக்க வேண்டும் என்றால் - வெறி என்ற வார்த்தையில் உள்ள கெட்ட பண்பை நீக்கி விட்டால் அது தான் சரியான வார்த்தையாக இருக்கும். cricket ரொம்ப சுமாராக தான் ஆடுவேன், ஆனால் ஒவ்வொரு matசும் எனக்கு உலக கோப்பை final தான். பந்தை தாவி பிடித்து அடிபட்டது கொஞ்சம் நஞ்சம் அல்ல. Jonty rhodes மீது அளவில்லா பற்று. எல்லா விளையாட்டிலும் ஜெயிக்க வேண்டும். திறமையை விட உணர்வே அதிகம்!
இப்படி இருக்க நாங்கள் விளையாடுவதில் ஒரு மாற்றம் தேவை பட்டது. எப்பொழுதும் போல விளையாடுவதில் விஜய் மட்டும் நன்றாக விளையாடி, நாங்கள் அனைவரும்சீக்கிரமே out ஆவதால் இந்த ஏற்பாடு. ரன்னெர் மேட்ச் என்று பெயர் வைத்தோம். இரண்டு பேர் batting செய்வார்கள்;ஒருவன் bowling போடுவான், ஒரே ஒரு fielder தான் (இன்னும் ஒருவன் இருந்தால் அவனை keeping செய்ய சொல்வோம்). இப்பொழுது ஒருவன் out ஆனால், அவன் fielding siடுக்கு வந்திட வேண்டும். fielding செய்பவன் batting செய்வான். இப்படி ஒரு சுழற்சி முறையில் இருக்கும் நான்கு அல்லது ஐந்து பேர் batting bowling என்று மாற்றி மாற்றி விளையாடுவோம் - பத்து wicket விழும் வரை. பின்னர் நாங்களே chasing team ஆக மாறி விடுவோம். இதனால் ஒரு endடில் விஜய் நின்றாலும் எங்கள் அனைவருக்கும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கு நாங்களே பெயர் சூட்டி கொள்வோம். இந்திய பாகிஸ்தான் தொடர்கள் எல்லாம் நடத்தி இருக்கிறோம்.
நிறைய நிகழ்வுகள் நடந்திருக்கிறது - நாங்கள் விளையாடும் இடத்தில் ஒரு meter board இருந்தது, அதற்கு ஒரு மரக்கதவு.படித்து கொண்டிருந்த ரமணி திடீரென்று நான் ஒரு over batting ஆடுகிறேனென்று ஆட, அவன் அடித்த பந்து அந்த meter board கதவை உடைத்து. அடுத்த நிமிடம் - அனைவரும் பிடி ஓட்டம். எல்லோரும் வீட்டிற்கு ஓடினோம், விஜய் தான் வந்து உடைந்த கதவை அப்படியே பொருத்தியாவது வைப்போம் என்று அடுக்கி வைத்தான். சக்தி அண்ணா எங்கள் crickeடை கொஞ்ச நாள் தடை செய்து விட்டார். பிறகு நாங்கள் எல்லோரும் சேர்ந்து கெஞ்சியதில் தடை நீக்கப்பட்டது.
அந்த காலனியில் இருந்த ஒரே பெண் காயத்ரி, அவளும் சில நேரங்களில் நாங்கள் விளையாடுவதை பார்க்க வருவாள். நன்றாக படிக்கும் கெட்டிக்காரி. ஒரு முறை நான் misfield செய்வதை கிண்டல் செய்தாள். ஒரு மிருகத்தின் பெயர் சொல்லி திட்டிவிட்டேன். என் அம்மாவிடம் சொல்லி விட்டாள். என் அம்மாவை பற்றி தான் ஏற்கனவே சொன்னேனே - அவள் ஈபிகோவில் இது non-compundable offence.அவள் வீட்டிற்கே சென்று அவள் அப்பா அம்மா இருக்கும் பொழுது மன்னிப்பு கேட்டேன்.
சுசீலா வீடு வேலை செய்பவள். ஒரு முறை என் அண்ணனும் நான் high catch practice செய்யும் பொழுது அவள் குறுக்கே வந்து விட்டாள். முன்பல் இரண்டும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். பந்து பட்டு பல் உடைந்து விட்டது. சக்கரையை அமுக்கினோம். "பார்த்து விளையாடு புருஷோத்து" என்று சொல்லிவிட்டு சென்றாள் (அவள் என் பெயரை அப்படி தான் சொல்வாள்).
விளையாடி முடித்தவுடன் cricket பற்றி பேசுவோம். இப்பொழுது வரும் preview show - post match analysis எல்லாம் உண்டு. ஷங்கர் ஒரு diaryயில் cricket statistics எல்லாம் வைத்திருப்பான். 2015 ஆண்டு உலக கோப்பை எங்களை போன்றவர்களுக்கும், உலகில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் ஏற்ப "காதலர் தினத்தன்று" தொடங்குகின்றது.
இன்று
ரமணி -அமெரிக்காவில் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் இருக்கிறான் (அதன் நிறுவனரா என்றுதெரியவில்லை, ஆனால் மிக முக்கிய இடத்தில இருக்கிறான்).
ஷங்கர் -அண்ணா பல்கலைகழகம்- infosys நிறுவனம் - அமெரிக்கா பயணம் - இந்தியாவுக்கு திரும்ப வந்து தானே ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறான்.சுஜாதா இவனிடம் பேசி இருக்கிறார் - இதற்கு மேல் ஏதும் இவனை பற்றி சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்.
விஜய் - பப்பா - கணேஷ்ராம் - என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
காயத்ரி - ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் பம்பாயில் இருக்கிறாள்.
காயத்ரி - ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் பம்பாயில் இருக்கிறாள்.
நான் - இன்றும் cricket விளையாடி கொண்டே தான் இருக்கிறேன். திறமையில் ஏதும் மாற்றம் இல்லை, உணர்வில் ஏதும் குறையவில்லை. என் மகனை "Organic" ஆக வளர்க்க வேண்டும் என்றெண்ணி திறந்த வெளியை தேடி கொண்டிருக்கிறேன்.
எங்கள் வீடு -நான் அதே வீட்டில் தான் வசித்து வருகிறேன். நிறைய structural மாற்றங்கள். திறந்த வெளி கொஞ்சம் கூட இல்லை. அண்டை வீட்டில் இருப்பவர்களின் பெயர் கூட தெரியாது.எங்கள் மைதானம் அதே போல் தான் இருக்கிறது. அங்கே ஒரு car நிற்கிறது. கடந்து செல்லும் பொழுது எல்லாம் cricket நினைவுகளே!
முடிவுரை: என்னை பொறுத்த வரை இதற்கு எப்படி முடிவுரை போடமுடியும் என்று தவிக்கிறேன். இந்த தவிப்பு ஒரு வித சுகமே. சரியாக சொல்ல போனால் என் மனதில் இருந்ததில் ஒரு துளி கூட சொல்லி முடிக்கவில்லை. இதை ஒரு தொடர்கதையாய் எழுதினால், mega serial தோற்று போகும். நீங்களும் அப்படிதான்! உங்கள் கதையும் அப்படிதான்!
இளமை பருவம் பேரின்பமே!
எங்கள் வீடு -நான் அதே வீட்டில் தான் வசித்து வருகிறேன். நிறைய structural மாற்றங்கள். திறந்த வெளி கொஞ்சம் கூட இல்லை. அண்டை வீட்டில் இருப்பவர்களின் பெயர் கூட தெரியாது.எங்கள் மைதானம் அதே போல் தான் இருக்கிறது. அங்கே ஒரு car நிற்கிறது. கடந்து செல்லும் பொழுது எல்லாம் cricket நினைவுகளே!
முடிவுரை: என்னை பொறுத்த வரை இதற்கு எப்படி முடிவுரை போடமுடியும் என்று தவிக்கிறேன். இந்த தவிப்பு ஒரு வித சுகமே. சரியாக சொல்ல போனால் என் மனதில் இருந்ததில் ஒரு துளி கூட சொல்லி முடிக்கவில்லை. இதை ஒரு தொடர்கதையாய் எழுதினால், mega serial தோற்று போகும். நீங்களும் அப்படிதான்! உங்கள் கதையும் அப்படிதான்!
இளமை பருவம் பேரின்பமே!